பக்கம்:பாரதத்தில் செழித்த வைணவம்.pdf/122

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாரதத்தில் செழித்த வைணவம் 121

னால் அமையும் கடமைகளைப் பற்றன்றி ஆற்றுவானே யானால் வீடுபேறு அடைவது திண்ணம். அவன், இல்லறத்தில் இருந்தாலும் துறவை மேற்கொண்டாலும் அவனது பற்றற்ற உள்ளமே இங்குக் கருதப்பெறுவதாகும்.

   நிம்பார்க்கரது வேதாந்தக் கொள்கை, கருத்து வரலாற்றிலே, மெய்ப்பொருள் இயல் சமயம், அறம் பற்றிய துறைகளில் மிகச் சிறந்த பங்குகொண்டு விளங்குவதைக் காண்கிறோம். நிம்பார்க்கரது கருத்து முறைகளிலே குறிக்கத்தக்க கூறாக அமைவது இயைபும், இசைவும் காணும் நோக்கேயாகும். நிம்பார்க்கர் சம நோக்கில் நன்றாக நிலைத்து ஆழ்ந்த அமைதியான அகக் காட்சியால் யாவற்றையும் உட்படுத்துகின்றவகையில் உள்பொருளில் பல நிலைகளையும் ஒருங்கே உணர்ந்தார்.
   பல்வேறு உள நிலைகள், தூண்டுதல்கள், பற்றுதல்கள்,திறமைகள் உடையனவாக மக்கள் இனம்காணப் பெறுகின்றது. உளப்பாங்குகள் எத்தனை உண்டோ அத்துணையையும் நிம்பார்க்கர் நன்கு நினைவில் வைத்து, மாறுபடுகின்ற கருத்துகளைத் தவிர்த்து, அவற்றிடையே ஒற்றுமை காணுகின்ற நிலையினை மேற்கொள்கிறார்.
   எப்பொழுதும்இருவேறு கருத்துகளைத்தீவிரமாகக் கொள்வதை நிம்பார்க்கர் விரும்புவதில்லை. வேறு பாடுகளைத் தவிர்த்து அவற்றினை ஒன்றுபடுத்துகின்ற ஆர்வம் எப்பொழுதும் உன்டையவர், நிம்பார்க்கர். மெய்ப் பொருள் இயல் உலகில் வேறுபாடின்மையை வேறுபாட்டோடும் பன்மையை ஒருமையோடும் இணைத்துக் காண முயல்கிறார். நிம்பார்க்கர் கருத்துப்படி வேறுபாடும் உண்மையே.வேறுபாடின்மையும் உண்மையே. பன்மையும் உண்மையே. ஒருமையும் உண்மையே. வேறுபடுகின்ற நிலைகளை உண்மையெனக் கொண்டு. அவை தம்முள் இயைவன என்று கருதுகிறார். சமய உலகிலே, அத்துவிதம் தனித்த அறிவு நிலை ஒன்றையே உறுதியாகக் கொண் டுள்ளது. பிற்கால வைணத்தில் உணர்ச்சி நிலைகள்