பக்கம்:பாரதத்தில் செழித்த வைணவம்.pdf/124

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வல்லபரின் வைணவ வேதாந்தம்

   வேதாந்தக் கருத்து முறைகளுள் சுத்தாத்வைதத்தைப் பரப்பியவர் வல்லவர் ஆவார். தென்னிந்தி யாவில் சென்னைக்கு 50-மைல்கள் வடமேற்கே உள்ள கன்கராவத் என்னும் கிராமத்தில் வசித்த கல்வி கேள்விகளில் வல்ல தைலாங்கு பிராமணர் குடும்பத்தில் பிறந்தார். வல்லபரது பெற்றோர், காசியை நோக்கித் தமது கிராமத்தை விட்டுப் பிரிந்தனர்.
   மத்திய பிரதேசத்தில் ரெய்பூருக்கு அருகே சம்பாரன்யம் என்னும் இடத்தில் வல்லபரது பிறப்பு நேர்ந்தது. வல்லரது குடும்பம் பரத்வாஜரது தோத்திரத்தைச் சேர்ந்தது தைத்ரீயத் கருத்து முறயைச் சேர்ந்த கிருஷ்ண யஜுர் வேதத்தை வல்லபர் குடும்பம் பின்பற்றியது. சோம வேள்விகள் பலவற்றை முறை பிறழாத வகையில் வல்லபரது குடும்பத்தினர் புரிந்ததால் தீக்ஷிதப் பட்டம் வல்லபரது குடும்பத்தினருக்குச் சிறப்பாக அமைந்தது.
   வல்லபரது கருத்துமுறை, வைணவத்துள் ஒருவகையாகும். கோபாலரது உருவம் இவ்வைணவப் பிரிவினுள் வழிபடப் பெறுகிறது. கோபாலரது வழிபாடு, சோம