பக்கம்:பாரதத்தில் செழித்த வைணவம்.pdf/126

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாரதத்தில் செழித்த வைணவம் 125

   உறுதியான அறிவிற்கு மூல நூல்களாக அமைவன: வல்லபர் நான்கு அடிப்படையான நூல்களை மெய்ப் பொருளியல் சிக்கல்கட்கு விடை காணும் தலையாய நூல்கள் எனக் கருதுகின்றார்.(1) உபநிடதங்கள் உள்ளிட்ட வேதங்கள், (2) கீதை, (3) பிரமசூத்திரம், (4) பாகவதம், இங்குக் குறிக்கப்பெற்ற மூல நூல்கள் ஒன்றையொன்று தழுவுவன, சார்ந்தன. ஐயங்கள் நிகழுமேல், முற்பட்ட நூல்களைப் பிற்பட்டநூல்களின் துணையைக் கொண்டு, மேற்குறித்த நூல்களின் வரிசை முறையிலே அறியலாம். இவ்வாறு மூல நூல்கள் ஒன்றையொன்று சார்ந்து விளங்குவதால், பாகவதம் தனித்ததொரு நிலையினை வல்லபரது கருத்து முறையிலே பெறுகிறது. மற்றொரு நோக்கிலே, வேதமும் பிரம சூத்திரம் ஒரு தொகுதியாகக் காணப்படுகிறது.
   கீதையும், பாகவதமும், மற்றொரு பகுதியாகும். கீதைக்கு அமைந்த எல்லாக் குறிப்புகளையும் விளக்கும் பேருரையாகப் பாகவதம் அமைவது முற்றிலும் பொருந்தவதே வல்லபருக்கு முன்னால் பல வேதாந்தக் கருத்து முறைகள் இருந்தன. இக்கருத்து முறைகளை நிறுவியவர்கள் வேதமூலப் பாடங்களைத் தமது விருப்பப்படி விளக்கினர். சங்கரது விளக்கம், மிகுந்ததிறன் ஆய்வுக்குக் காரணமாயிற்று.
   வல்லபர் இறைவனால், உலகிலே தோன்றியவர் என்ற செய்தி கூறப்படுகிறது. சங்கரர் மேற்கொண்ட விளக்கத்தின் விளைவாக எழுந்த குழப்பத்தைத் தீர்ப்பதன் பொருட்டு, வல்லபரது வருகை அமைந்ததாகக் கூறுகின்றனர். வல்லபர், தம்மை இறைவனது பணியாள் எனக் கூறிக் கொள்கிறார். தாம் தீயின் வடிவத்தை மேற்கொண்டதாகவும் கூறுகிறார். சங்கரரது கொள்கைகளைத் திறன் ஆய்வு முறையிலே விளக்குகிறார்; மூல நூல்கட்கு உரிய விளக்கங்களைக் காணுகிறா்; இறைவனது மாளிகையின் வாயில்களை அனைவருக்கும் திறந்த