பக்கம்:பாரதத்தில் செழித்த வைணவம்.pdf/128

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாரதத்தில் செழித்த வைணவம் 127

பிரமம்: வல்லபருக்கு உயர்வற உயர்ந்த உள்பொருள் கிருஷ்ணனேயாகும். உபநிடதங்களில் பிரமம் எனக் கூறப்பெறுவதே கிருஷ்ணன் என வல்லபரால் கொள்ளப் பெறுகிறது. பாகவதத்துள் பரமான்மாவாகப் பேசப் பெறுவது பிரமமேயாகும். கிருஷ்ணபகவான் அல்லது புருஷோத்தமன் அல்லது மக்களுள் தலைசிறந்தோன் உயர்வற உயர்ந்த இறைவனேயாகும். கிருஷ்ணன் பிரமத்தின் தெய்வீக வடிவமாகும். (ஆதி தெய்வீகம்). பிரமம் ஒன்றே. இரண்டுஅற்ற ஒன்றாகும். தனக்கு உவமையில்லாத நிலையில் பிரமம் ஒன்றெனவும் குறிக்கப்பெறுகிறது. எல்லாத் தெய்வீக நலன்களையும் பிரமம் உடையது.இத்தெய்வீக நலன்களுள் மாறுபடுகின்ற குணங்களும் உண்டு. பெருந்தன்மையான குணங்கள் ஏதும், பிரமத்திடத்து இல்லை.

    பிரமம், உண்மை, அறிவு, ஆனந்தம் ஆகும். இனிமை யாவும் ஒருங்கே பிரமத்திடத்து நிறைந்துள்ளது. எல்லை யில்லாத பேரின்பமே, பிரமத்தின் உண்மை வடிவமாகும். (ஆகாரம்).
   இன்பமே, பிரமத்தின் வடிவம் என்று கொள்ளுகிற போது வல்லபர், பிரமத்தைச் சகுண நிலையில் கருதுகிறார். பிரமம், உருவம் உடையது. ஆதலால், சாகாரப் பிரமம் எனக் குறிக்கப் பெறுகிறது. பிரமம், என்றுமுள்ள பொருள், மாறாதது, எங்கும் நிறைவது, யாவற்றையும் அறிவது, எல்லாம் வல்லது. எந்நிலையிலும், எத்தருணத் திலும் யாதாகவும் ஆகின்ற ஆற்றல் உடையது பிரமம். இவ்வாற்றல் பொதுவாக மாயாசக்தி எனக் கூறப்பெறும்.
   அறிவு, செயல், தோற்றம், ஒடுக்கம் ஆகிய பல ஆற்றல்களைப் பிரமம் உடையதாகிறது. எவ்வித வேறுபாடுகளும், பிரமத்திடத்து இல்லை. யாவற்றையும், படைப்பதாகப் பிர்மம் விளங்குகிறது.இப்பிரபஞ்சத்திற்கு முதற் காரணமாகவும், நிமித்த காரணமாகவும் ஒருங்கே பிரமம் விளங்குகிறது. ஆன்மாக்களின் வேறாகப் பிரமம்