பக்கம்:பாரதத்தில் செழித்த வைணவம்.pdf/133

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

132 த கோவேந்தன்

வல்லபர் கருதியின் கருத்தையே தலைமையுடையதாகக் கூறுகிறார்.

    பிரபஞ்சத்தின் படைப்பு, கடவுளைப் பொறுத்த வரையில் ஒருவிளையாட்டேயாகும். இறைவன் முற்றிலும் தன்னிறவு உடையவன் ஆதலால் பிரபஞ்சப் படைப்பு எவ்விதக் குறையையும் நிறைவு செய்வதற்கும் அன்று; பிரபஞ்சம் பிரமத்தினுடைய உண்மைக் கூறாகும். பிரமத்தின் உண்மையான வெளிப்பாடாகும். பிரபஞ்சம், பிரமத்தின் பெளதிக வடிவமாகும். பிரபஞ்சம் திரிபுக் காட்சியில் தோன்றுவதன்று. பிரபஞ்சம் பிரமத்தின் வேறு அன்று பிரபஞ்சத்திற்கும் பிரமத்திற்கும் இடையே உள்ள உறவுகாரணகாரிய உறவாகும்.இவ்வுறவு துாய அத்துவித உறவாகும். சங்கரரது கருத்தில் காணும் மாயை போன்றவை, உறவின் தூய்மையைக் கெடுப்பன அல்ல. பிரபஞ்சம் இறைவனது மாட்சியைப் பற்றிய கருத்தை வழங்குகிறது. இறைவனது மாட்சியை உணர்வோர், இறைவனை வழிபடாமல் இருக்க இயலாது.
    இப்பிரபஞ்சத்தில் யாவும் பிரமமே. பிரமத்தின் வெவ்வேறு குணங்கள் வெவ்வேறு பொருள்களாகப் பிரமத்தின் ஆணைக்கு ஏற்ப வெளிப்படுகின்றன. இவ்வாறு வெளிப்பட்டுத் தோன்றும் பொருள்கள் வெவ்வேறு பெயர்களில் விளங்குகின்றன. மாயையின் காரணமாக ஆன்மாக்களது காட்சி அல்லது அறிவு மறைப்புறுகின்றது. இம்மறைப்பால், புறப்பொருள் களுக்கு ஏற்ப மனதிலே மற்றொரு பொய்ப்பொருள் தோன்றுகிறது. புற உலகில் உண்மையாக உள்ள பொருள்களின் மீது வைத்துக் காணப்பெறுகின்ற அப்பொய்த்தோற்றமே மனத்திலே அமைவன. இவ்வாறு புறப்பொருள்களின் காட்சி காரணமாக மனத்திலே எழுகின்ற பொய்த் தோற்றங்கள் பொருள்களை உள்ளவாறு காண வொட்டாது தடுக்கின்றன.
    உண்மைப் பொருள்களைக் கற்பனைக் கூறு உடையனவாகக் காணுகின்றோம். கற்பனைக் கூறுகள்