பக்கம்:பாரதத்தில் செழித்த வைணவம்.pdf/136

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாரதத்தில் செழித்த வைணவம் 135

தன்மை, ஆன்மாவிடத்து மறைந்து நிற்கும். பிரமத்தின் ஏனைய இரு பண்புகளாகிய உளதாகும் தன்மையும் அறிவுடைமையும் ஆன்மாவிடத்துத் தோன்றுகின்றன. ஆன்மா பிரமத்தின் பகதியாதலால், பிரமத்தின் வேறு அன்று.

    வல்லபர் விரும்புகின்ற சுத்தாத்வைதம் இங்கு எளிதில் நிறுவப்பெறுகிறது. பிரபஞ்சம் பிரமத்தினின்று தோன்றுகின்றது. ஆன்மாக்கள், பிரமத்திடத்து தோன்றுவன. ஆன்மாக்களுக்கோ, பிரபஞ்சத்திற்கோ தனித்த இருப்பு இல்லை. ஆதலால், வல்லபரது சுத்தாத்வைதம் எவ்விதத்திலும் பாழ்படாது காக்கப்பெறுகிறது.
    ஒருமலரின் மணமானது மலர் உள்ள இடத்திற்கு புறத்தே நன்கு பரவுகின்றதைப் பார்க்கிறோம்.இதுபோல ஆன்மா பரிமாணத்தில் மிகச் சிறியதாக அணுவடிவிலே, அமைந்தாலும் உடல் முழுமையும் நன்கு பரவித் தனது ஆற்றலைப் புலப்படுத்துகின்றது. அறியும் பண்பு, ஆன்மாவை உடல் எங்கணும் பரவி யாவற்றையும் அறிகின்ற இயல்பைத்தரப்பார்க்கிறோம். ஆன்மா, பிரமத் தின் பகுதியாக இருந்து அறிகின்ற ஒர் உள்பொருளாக அமைகிறது. 

-

    சங்கரது அத்துவிதத்தில் ஆன்மா, தோற்றம் மட்டும் உள்ளதாகும். ஆன்மாவிற்குத் தோன்றுகின்ற உண்மையே உண்டு. இப்பிரபஞ்சத்தைப் படைக்கின்ற விளையாட்டிலே பிரமம் ஈடுபட நினைக்கிறபொழுது ஆன்மாவிடத்து இன்பக்கூறு பொதிந்துள்ளது. பின்னர், அது வெளிப் படுகின்றது. அறுவகைத் தெய்வீகப் பண்புகள் ஆன்மா விடத்து மறைந்து நிற்கின்றன. ஐஸ்வரியம் போன்ற அறுவகைக் குணங்கள் ஆன்மாவிடத்துத் தோன்றாது ஒடுங்கி உள்ளன.
    நுண்ணிய ஆன்மாக்கள் பலவகையினவாகத் தோன்றுகின்றன. அறுவகைத் தெய்வீக குணங்கள் வருமாறு: () ஐஸ்வரியம்(2) வீரியம்(3) யாசஸ் (4) பூர் (5) ஞானம் (6) வைராக்யம்.