பக்கம்:பாரதத்தில் செழித்த வைணவம்.pdf/149

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

148 த கோவேந்தன்.

 வல்லபர், வேத நூல்கள் உண்மையான இருமையற்ற கொள்கையையே போதிக்கின்றன என்ற் கருத்தை உடையவர். இவ்விருமையற்ற நிலை வழிபாட்டோடு இயைவதே என்றும் கூறுகின்றார். இக்கருத்து அண்மையில் ஸ்ரீ அரவிந்தராலும், வற்புறுத்தப் பெற்றுள்ளது. சங்கரர் வற்புறுத்த விரும்பிய கருத்துக் கொள்கை ஒருமையினை மூலக்கருத்தாகக் கொள்வதாகும். இது வல்லபர்க்கு உடன்பாடன்று.
      இராதாகிருஷ்ணன், குறிப்படுவதுபோலச் சங்கரர், "புலனிறந்து பொருளியல் ஆய்வுத் துறையில் ஆழ்ந்த அறிவும், அளவைத் திறனும் உடையவர்; ஆதலால் மெய்ப்பொருளியல் அறிஞராகவும், முரண் நிலைக் கொள்கை ஆய்வாளராகவும் விளங்குகின்றார்.இத்துறை களுள் சங்கரர் நிகரற்றவர். வல்லபர், வேத நூல்களின் முடிவினை, முடிந்த முடிவாகக் கொண்டு அவற்றின் தலைமையை ஏற்பதில் நிகரற்றவர் ". ஆதலால் வல்லபரது கருத்தமைவு சமயச் சார்புடையதாக அமைந்து கிறித்துவ சமயச் சார்புடைய மெய்ப்பொருளியலை நினைவுபடுத்துகிறது. ஆதலால், சங்கரரும் வல்லபரும் என்றும் இயையுமாறு இல்லை.
   வல்லபர் கிருஷ்ண பரமாத்மாவின் ஆணைகளை நேராக ஏற்று மக்களை இறைநெறியிலே ஈடுபடுத்துகின்ற புனிதமான பணியிலே தொடங்கினார் என்று கூறப்பெறுகிறது. ஜாதி, தேசம் ஆகிய வேறுபாடுகள் எல்லாம் கடந்த காட்சியைக் கொண்டார். இறைபணி நிற்றலிலே மக்களை ஈடுபடுத்தினார்.வல்லபர் மேல்நாட்டு புளோட்டினஸ் (Plotonus) என்பார் கூறுவதைப் போல, 'பெற்றோரினின்று உடனே பிரிக்கப்பட்டு, பெற்றோரி னின்று மிக்க தூரத்தில் வளர்க்கப்பெற்ற குழந்தைகள், பெற்றோரை மறந்து தன்னையே மறக்க நேர்வதுபோல, ஆன்மாக்களும் இறைவனிடத்து இருந்து பிரிவுற்றுத் துன்புறுகின்றனர்” என்றும், எவ்வளவு விரைவில்