பக்கம்:பாரதத்தில் செழித்த வைணவம்.pdf/15

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாரதத்தில்-செழித்த வைணவம் 13 'காண்ட்’ அவர்கள் கூறும் உண்மை உலகுக்கும் தோற்ற உலகுக்கும் உள்ள மாறுபாட்டில் இந்த இடை வெளியைக் காணலாம். ‘பிராட்லி அவர்களது உள்பொருளுக்கும், தோற்ற உலகுக்கும் உள்ள மாறு பாட்டில் காணலாம்; சங்கரரது கடந்த உண்மைக்கும் (பாரமார்த்திக சத்தியம்) அனுபவ உலக உண்மைக்கும் (வியவகாரிக சத்தியம்) உள்ள வேறுபாட்டில் காணலாம். இவ்வாறு காண்ட்', 'பிராட்லி’ ‘சங்கரர் போன்றோர் உண்மை உலகை அனுபவ உலகினின்று பிரித்து உணர்த்த வேண்டியவர் ஆயினர். இவ்வாறு வேறுபாடுகள் கண்டு விளக்க வண்டிய இக்கருத்தினை இராமானுஜர் தவிர்க்கிறார்.

  புலக்காட்சி, விஞ்ஞானம், மெய்ப்பொருளியல் ஆகிய மூன்று நிலைகளில் அறியப்படும் அறிவினை ஏற்புடையதாகக் கொள்கிறார்.இம்மூன்று நிலைகளை யும் இராமானுஜர், பிரமம் உடனாக உணரப்பெறுவது என அறிதற்குத் தக்கனவாகக் கொள்கின்றார். முழுமையுடையது, அளவை நெறி நின்று பிரமத்தைப் பரமப் பொருள் என அறிதல் பிரம ஜிக்ஞாசம் (Brahma Jinasasam) எனப்படும்.இவ்வாறு அறிதல்பிரமத்தை உள் உணர்வினாலே அடைவதற்கு வழிகாட்டும். (Brahmanuvaba) உள்பொருள் ஒன்று என்று உறுதியாக அறிதல், அறிவாகும். உள்பொருளை மறுப்பதும் உண்டு என்பதையும் இது ஏற்பதாகும். (உண்மையை ஒத்துக் கொள்வதாகும்) பிரமம் உண்மை ஆனால், பிரமத்தில் ஊன்றிய இவ்வுலகம் உண்மையாகும். நாம் பகுதியான ஒன்றினின்று முழுமையான ஒன்றினை அறியலாம்.
  அறிவினை அளத்தற்குரிய கருவியாக உண்மை அறிவினுள்ளே அமைகிறது. உண்மை உள்ளதாக இருக் கின்றது; படிப்படியே முழுமை அடைகிறது. உள்ளத் தினுடைய, என்றும் உள்ள பண்பாக, உண்மையை உணர்வதே முழு உணர்வாகும். இவ்வுணர்வினை அடை