பக்கம்:பாரதத்தில் செழித்த வைணவம்.pdf/151

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

 சைதன்யரின்

                 பேதாபேதம்

இங்குக் குறிக்கப்பெறுகின்ற சைதன்யரது மெய்ப்பொருளியல் தச மூல சுலோகம் எனனும் நூலை அடிப்படையாகக் கொண்டது. இச்சுலோகங்களைச் சைதனயரே எழுதியவர் என (வங்காள) கெளடிய வைணவர்கள் கருதுகின்றனர்.

   சைதன்யரது ஆன்மீக வாழ்விலே குருவாக அமைந்த வர்கள் (தீக்ஷா குருவும், சந்நியாச குருவும) மாத்வர்களே. சைதன்யரே தாம் மாத்வப் பிரிவைச் சேர்ந்தவர் என்றும் மாத்வரது துவைத நிலையினைத் தனது போதனைகளிலே மேற்கொள்வதாகவும் கருதுகின்றார். என்பதை நாம் முதலிலேயே குறிப்பிடவேண்டும். ஆனால் இவ்வாறு இருப்பினும் தச மூல சுலோக விளக்கங்களுள், காணப்பெறுவதைப் பார்த்தால் ஒரு வகை பேதாபேதம் அல்லது "வேறுபாட்டில் வேறுபாடின்மை” என்னும் கருத்து வகை தான் காணப்பெறுகிறது. இது நிம்பார்க்கரது பேதாபேத நிலையின் மிக நெருங்கியதாகும்.
    சைதன்யரது மெய்ப்பொருளியல்,நாம் இன்று காணுகின்ற நிலையில் கலப்பற்ற துவைத வாதமாக அல்லது இருமைக் கொள்கையாக இல்லை. மாத்வர் பிரம