பக்கம்:பாரதத்தில் செழித்த வைணவம்.pdf/158

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாரதத்தில் செழித்த வைணவம் 157 உள்ள தன்மை, இன்பம், அறிவு ஆகியவற்றின் நிறைவாகப் பிரமம் அமைகிறது. கொழுந்துவிட்டு எரியும் நெருப்பின் ஒளி, நெருப்பை உட்படுத்துகிறது. நெருப்பை மூலமாகக் கொள்கிறது; அடிப்படையாகக் கொள்கிறது. இதுபோல, நிர்க்குணப் பிரமம் ஒளிவட்டமாக விளங்கி இறைவனை உட்படுத்துகிறது. இறைவனின் ஆன்மீகத் துறையிலே நிர்க்குணப் பிரமத்திற்கு மூலமாகவும் அடியாகவும் விளங்குகிறது. ஹரி இறைவனாக விளங்குகின்ற நிலையில், அனைத்து நிறைவும் உடையவனாக ஒருமையும் இருமையாக விளங்குகின்றான்.இங்கு இருமைநிலையில் குறிக்கப் பெறுபவர் கிருஷ்ணனும், ராதையுமாகும். (இறைவனும், அவனது ஆற்றலுமாகும்). இவ்விருவரும் ஒருவரோடு ஒருவர் கட்டுண்டு விளங்குகின்றனர். இவ்விருவரையும் கட்டுப்படுத்துகின்ற தளைகள் பக்தி, அன்பு, பற்று ஆகியவையாகும். பரமாத்மன் அல்லது பிரபஞ்சத்துள் விளங்கும் அகனமர்ந்த ஆற்றல் ஹரி என்னும் இறைவனது ஒரு கூறாகும்; ஹரி இறைவனாகத் தனது முழுமையும் நிறைவும் தோன்ற விளங்குகின்ற நிலையில், ஒரு பங்காகும். ஹரி, மாயை அல்லது அறியாமையாகிய இப்பிரபஞ்சத்தைத் தனது மாட்சி, ஆற்றல் ஆகிய இரு பண்புகளில் துணை கொண்டு படைத்துள்ளார். தான் படைத்த இவ்வுலகினுள் புகுந்துள்ளார். அல்லது தனது முக்கிய நிலையினின்று ஒரு கூறினைப் புகுத்தி ஆற்றல் பெறச் செய்துள்ளார்.இவ்வாறு ஆற்றல் பெற்ற வடிவமே விஷ்ணுவாகும். விஷ்ணு, ஹரியின் ஒரு கூறேயாகும். ஆயினும் பிரபஞ்சத்தின் ஆன்மாவாகும். ஹரியின் முழுமைக்கோ, நிறைவுக்கோ எவ்விதத்திலும் விஷ்ணு குறைந்தவர் அல்லர். ஏனெனில் விஷ்ணு நிறைவும், முழுமையும்