பக்கம்:பாரதத்தில் செழித்த வைணவம்.pdf/168

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாரதத்தில் செழித்த வைணவம் 167

உறவினாலே, மாயையின் மயக்குகளினின்று விடுதலை யுற்று விளங்கவும் இயலும்.

    ஜீவ சக்தி என்பது இறைவனின் சொரூப சக்தியின் ஒருவகை வெளிப்பாடு; ஆதலால் இறைவனை ஒருவகையில் வெளிப்படுத்தியே தீர வேண்டும். ஜீவசக்தியாக இருந்து வெளிப்படுத்துவது, ஒர் எல்லைக்குட்பட்ட நிலையை வழங்குவதாயினும் இறைவனது உண்மை, ஆனந்தம், உணர்வு ஆகிய நிலைகளால் ஆன இறைவனது சொரூபத்தை வெளிப்படுத்துவதேயாகும்.

பந்தமும் விடுதலையும்

    இறைவனுக்கும், ஜீவர்கட்கும் இடையே அமையும் உறவு யாது? இதனை எரியும் நெருப்பிற்கும், அதனின்று எழும் தீப்பொறிகட்கும் யே அமையும் உறவிற்கும் ஒப்பிட்டு உள்ளனர்.எரிகின்றநெருப்பானது தன்னிடத்து இருந்து பொருட்களைத் தோற்றுவிக்கிறது. இவ்வாறு தோன்றும் பொறிகள் சிறிய அளவிலே நெருப்பின் தன்மையினைப் பெற்றே விளங்குகின்றன. இதுபோல, இறைவன் முழுமையான ஆன்மீக உண்மையாகும். இறைவனிடமிருந்து தோன்றுகின்ற பொறிகள் ஜீவர்களாகும். ஜீவர்களாகிய பொறிகள் இறைவனின் முழுமையினை உடையவாதல் மேற்குறித்த உவமத்தால் விளங்குகின்றது.
    ஜீவன், இறைவனினின்று வேறுபட்டும், இறைவனோடு வேறுபடாதும், விளங்குகிறது. இறைவனது ஆன்மீக உண்மையை ஜீவர்கள் பெற்று விளங்கிற பொழுது வேறுபடுவது இல்லை. இறைவன் ஆன்மீக உண்மை, ஆனந்தம், உணர்வு ஆகியவற்றால் ஆனது.
    ஜீவர்கள் வேறுபடுவது எதனால் எனின், இறைவனது உண்மைத் தன்மையைச் சிறிய அளவிலே, தன்மெளன நிலைக்கு ஏற்பப்பெற்று விளங்குவதாலேயே