பக்கம்:பாரதத்தில் செழித்த வைணவம்.pdf/169

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

168 த. கோவேந்தன்

ஆகும். இறைவன், யாவற்றையும் உட்படுத்தும் ஆன்மீக நிலையில் உள்ள உள்பொருளாகும் இறைவன் இந்நிலையில் மாயாதீனன் ஆகும; அதாவது மாயையை இயக்கியும், அதனை அடக்கியும் விளங்குபவர் என்பதாகும்.

    இறைவன் தனது முழுமையான ஆன்மீக, நிலையிலே பகுப்பும்,அறிவின்மையும் தோன்றச்செய்கின்றார். ஜீவன் இறைவனது உண்மைகளை மெளன நிலையிலே மிகச் சிறிய அளவிலே பெற்று விளங்குகிறது. இந்நிலையில் விளங்கும் பொழுது ஜீவன், மாயையினால் அடக்கியாளப் படுகிறது. இறைவனது மாயா சக்தி உண்மையிலேயே இருவேறு வடிவங்களில் சொல்படுகிறது.
    பிரதானம்: மாயை பிரதானமாக விளங்குகிற பொழுது அறிவற்ற, பருமை உலகின் தோற்றத்திற்குக் காரணம் ஆகிறது. அவித்தை அறியாமையாகிய இவ்வாற்றல் ஜீவனைத் தனது உண்மை நிலையை மறக்கச் செய்கிறது. இறைவனது மீளா அடிமையாக ஆக்குகிறது: ஜீவனின் தனித்த நிலையில் தன் உண்மையோடு விளங்கச் செய்கிறது; இவ்வாறு விளங்கச் செய்வது பரம்பொருளுக்கு எதிராகத் தனித்த தன் வயம் உள்ள ஒரு நிலையிலே ஜீவன் இருப்பதாகக் கருதச் செய்வதாகும். இது அறியாமையாகும். உண்மை நிலையை மறக்கச் செய்வது மறைப்பு ஆகும்.
    எல்லைக்குட்பட்ட ஆன்மா, தெய்வீகச் சார்பற்ற நிலையில் தன் நிலைகளை வற்புறுத்துவதற்குக் காரணம், அறியாமையே ஆகும். அறியாமையானது எல்லைக்குட் பட்ட ஆன்மாவிற்குப் பல பண்புகளை மிகைபட, ஏற்றிக் காணுகிறது. இவ்வாறு காணுவதால், துன்பமும், ஏமாற்றமும் விளையக் காண்கிறோம்.
    
    பருமை உலகானது மாயா சக்தியின் விளைவு எனினும் (மாயா சக்தியின் சிதைக்கும் ஆற்றல்)