பக்கம்:பாரதத்தில் செழித்த வைணவம்.pdf/28

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

26

த. கோவேந்தன்

பிரமம் ஆகும். உண்மை, நன்மை, அழகு, பேரின்பம் ஆகிய பண்புகள் அல்லது என்றென்றும் நின்று நிலவும் குணங்கள், பிரமத்தைத் தமது மூலமாகப் பிறப்பிடமாகக் கொள்கின்றன.

பிரமம் தனக்குவமையிலாதனாக நிறைவுடையோனாக, புழுதிலா, குறைவிலா, உள்பொருளாக அமையக்காண்கிறோம். அனைத்து நிறைவுகளையும் ஒருங்கே பிரமம் உடையதாகும். சத்தியம், ஞானம், அபாத பாவமத்வம், சுந்தரம், ஆனந்தம் ஆகிய நிறைவுகள் பிரமத்தின் குணங்களாகும். புலன்கடந்த பொருளியல் அறஇயல், அழகியல், அனுபூதி இயல், ஆகிய வெவ்வேறு இயல்களில் உயர்ந்த இலட்சியங்களாக கருதுவன அனைத்தையும் இது நிறைவேற்றுகின்றது.

சத்தியம் என்ற சொல் பிரமத்தை உள்பொருளாகக்குறிக்கும். ஜீவன், பல பிறவிகளை எடுப்பது, பிரகிருதி அழியும் இயல்பு உடையது. இவற்றினின்றும் பிரிந்து உணர்த்தவே, உள்பொருள் அனைத்திற்கும் உள்பொருளாக உள்ளது என்று கூறப்பெறுவதற்கு உரியதாகப் பிரமம் அமைவதைச் ‘சத்திய’ என்ற சொல் உணர்த்துகிறது. மாற்றங்கட்கு எல்லாம் நிலைக்களனாக, மாறாத நிலையில் என்றும் உள்ளதாகப் பிரமம் விளங்குகிறது.

உலகு கொள்ளும் பன்மைத் தோற்றங்களை விளக்கும் ஒன்று, பிரமம் ஆகும். பிரமம் ஒன்றும் அற்று இருப்பது அன்று; தனித்த முற்றொருமையை, காலதத்துவம் கடந்த நிலையை விளக்குவதாகும். பிரமம் என்றும் உள்ளது. ஒளிகளுக்கெல்லாம் ஒளி தருவதாகிய உணர்வு உடையது. பிரமம் தன்னுள் உறவுகள் அனைத்தையும் கொண்டுள்ளது. மறுத்தலாகிய முறைமையால் பெறுகின்ற பொருளற்ற தனி உணர்வாகப் பிரமத்தைக் கூறுதல் ஆகாது. எல்லை கடந்ததாகப் பிரமம் கருதப்-