பக்கம்:பாரதத்தில் செழித்த வைணவம்.pdf/52

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

50 த கோவேந்தன் மகன் பிரிவென்னும் பாவச் சுமைகளால் வாடுகிறவனை இறைவனது திருவடிகளில் தஞ்சம் புக அழைக்கின்றது. முக்தியை அளிக்க உறுதி தருகின்றது. ஆழ்வார்கள், உபநிடத் இருவிகளைப் போல் இறைவன்ைக்காணும் வேட்கை மிகுந்தவர்களாகவும் இறைவனைக் கண்டவர்களாகவும் விளங்குகின்றனர். ஆழ்வார்கள் அருளிச் செய்த தமிழ்ப் பாடல்கள் வேதாந் தத்தை ஒத்தன. காரணம் ஆழ்வார்களது அருளிப்,பாடல் களுள் தெய்வீக ஞானம் அமைந்துள்ளமையாகும். 'பிரபக்தி'யின் மேலான நலத்தை ஆழ்வார்களது பாடல் கள் வற்புறுத்துகின்றன. இறைவனது காருண்யத்தை இறைஞ்சி நின்று ஜீவர்கள் உய்யும் அன்பு நெறியைக் காட்டுகின்றன. 'பிரபத்தி"யாவர்க்கும் பயன்படுவது; பிறப்பு, தகுதி, செய்யும் பணி. வாழும் நிலை ஆகியவற்றால் அமைகின்ற வேறுபாடுகள் எல்லாம் கடந்தது. எவ்வகையில் வேறு பட்டாலும் பிரபத்தி நெறியை மேற்கொண்டு ஜீவர்கள் உய்யலாம். சட்ட சமயத்துள் நீதி (Juristic) இரக்கத்தால் தணிய வேண்டு வதாகும். ஆனால், மீட்கும் சமயத்துள் (Redemptive Religion) நீதி அல்லது பழிவாங்குதல் மீட்சியின் ஆளுமைக்கு உட்படுகிறது. தண்டனை என்பதும் தயை அல்லது அருளில் ஊன்றுகிறது. பூரீவைஷ்ணவம் என்பது விசிஷ்டாத்வைத்தத்தின் சமயம் ஆகும்.இறைவன் நாராயணனாகவும், பூரீயாகவும், விளங்குகிறான். சட்டம், அன்பு, ஆகியவை பண்புகளாக என்றென்றும் இணைந்தனவாக அவ்விரு உருவங்களில் நிலைபெறுகின்றன. சட்டம், அன்பின்மீது ஆட்சி செய்யு மேல் கருமம், தப்ப ஒண்ணாதது. அன்பு, சட்டத்தின் மீது ஆட்சி செய்யுமேல், மனம்போன போக்கைத் தடுக்க முடியாது. ஆனால் இறைவனது இயல்பிலே, சட்டமும், அன்பும் ஒன்றியைந்து ஒன்றாதலைக் காண்கிறோம்.