பக்கம்:பாரதத்தில் செழித்த வைணவம்.pdf/69

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

68 த கோவேந்தன் முண்டக உபநிடதத்தைப் பின்பற்றி மாத்வர் வேதததை இரு வகைகளில் விளக்கலாம் என்று கருது கிறாா. ஒன்று, உயரிய விளக்கம், மற்றொன்று, தாழ்ந்தது ஆகும். வேதத்திற்குள்ள பொதுவான, பொது அறிவிற்கு உட்படும் பொருளைத தருவது தாழ்ந்த விளக்கம் ஆகும். மேலும் அழிவற்ற உண்மைப் பொருளைத் தருவது உயரிய விளக்கமாகும். உயரிய விளக்கம், தாழ்ந்த விளக்கத்தை மறுக்க வேண்டும் என்பது இல்லை. தாழ்ந்த தன் சிறப் பனைத்தையும், தன்னுள்ளே அடக்கியதே உயரிய விளக்க மாகும். தாழ்ந்த விளக்கம் என்பது அழிவற்ற உண்மையை அழியும் பொருள்களிலே காண்பது ஆகும். இக்காரணம் பற்றியே முண்டகத்தின் முடிபு ஒவ்வொரு வேதப் பகுதி யும் அழிவற்றதைப் பற்றிய அறிவைப் பிறப்பிக்கிறது.” என்பதாகும். அழிவற்ற பேருண்மையே, வேதம் உணர்த்தும் உண்மை என்றுகொள்வது ஆழ்ந்த படிப்பும் நுழைபுலமும் ஒருங்கே உணர்த்துவன என்பதாகும் நுழைபுலம் அல்லது ஆழ்ந்த படிப்பு, மற்ற நூழை புலன்களுள் படிப்புகளுள் ஒன்று அன்று. இக்கருத்தில் நுழைபுலம் அல்லது ஆழ்ந்த படிப்பு. மற்றைய நுழை புலன்களையும் படிப்புகளையும் தோற்றுவிப்பது; அவற்றிற்கு மூலமாவது என்று கொள்ள வேண்டும். “பிரமத்தைப் பற்றிய மெய்ப்பொருளியல் அனைத்து அறிவின் தோற்றமும்,இலக்கும் ஆகும்” என்ற முடியினை முண்டகம் கொள்கின்றது. இவ்வாறு கொள்வது வேதம் அழிவற்ற பேருண்மையினை உணர்த் தும் என்பதை அடிப்படையாகக் கொண்டது. இவ்வுண் மையினை உணர்வது ஆழ்ந்த படிப்பாலும், நுழைப்புலத் தாலும் இயல்வதாகும். அழிவற்றதன் உண்மையினை உணர்த்துவதே வேதத்தின் உட்பொருள் என அறிவது முறையான சிந்த னையின் விளைவாகும். வேதப் பகுதிகளின் உண்மைப் பொருளைக் கேட்க வேண்டும். கேட்டவற்றை நன்கு