பக்கம்:பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை.pdf/101

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் உரைநடை §§ மில்லாதபடி ஜொ வித்தன. அவன் மேலும் பேசலுற்ருன், என் னிடம் சொல்லுவதற்கு அல்ல என்பதை அவன் பேசும் வகை உணர்த்தியது” காதல்-அது இது என்று காரணம் காட்டாதே. காரணமற்றது என்ருலும் மனக்குறைவு உண்டாகிறது. காரணமற்றே நடந்த காரியமும் கொள்வதற்கு வேண்டி, காரணம்தான் போலும்.” "அவன் மூளையும், யோசனைகளும், உயர்ந்து உயர்ந்து, உருகலுற்றன; அழியலுற்றன. எல்லே கொள்ளா சாவ தானம், சமாதானம், ஒரு நிலை வரம்பிற்கு எட்டாமல் இரு புறமும், சிறிது சிறிது மிக அசைத்து, சஞ்சலப் பிரமை கொடுத்தன. அந்த நிலைமையில் சமாதானம் கொண்டவன் போன்று, சாவதானமாக, வீதியை உற்றுநோக்கி அவன் தின் முன்." இந்த விதமான சொல்லடுக்குகள்தான் சாதாரண வாசகர்களுக்கு மிரட்சி தருகின்றன. மெளனி புரியாத விதத்தில் எழுதுகிருர் என்று குறை கூறச் செய்கின்றன. கதாபாத்திரத்தின் மனஓட்டங்கள் மெளனியின் சீரிய சிந்தனைகளாக வெளிப்படுகின்றன. அவை கதைக்கு ஒரு கட்டுரைத் தன்மையை அளித்த போதிலும், படிப்பதற்குச் சுவையாகவும் சிந்தனைக்கு விருந்தாகவும் அமைந்துள்ளன. உதாரணமாக இந்தப் பகுதியைக் குறிப்பிடலாம் “என் மனம் ஓடியது, அது கட்டுக்கடங்காமல் சித்திரம் வரைய ஆரம்பித்தது. கோவில்-சந்நிதானம்ஆம். பகலிலும் பறக்கும் வெளவால்கள், பகலென்பதையே அறியாது தான் கோவிவில் உலாவுகின்றன. பகல் ஒளி பாதிக்குமேல் உட்புகத் தயங்கும் உள்ளே, இரவின் மங்கிய வெளிச்சத்தில், சிலைகள் pவகளை கொண்டு நிற்கின்றன .