பக்கம்:பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை.pdf/103

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் உரைநடை i { i ஸென்டன்ஸ்) ஆகிவிடுகிறது, அந்நிலையில், அவசரமாகப் படிக்கிற வாசகனுக்கு குழப்பம் ஏற்படுவது சகஜம்தான். உதாரணத்துக்கு குடும்பத் தேர் கதையில் வரும் இந்தப் பகுதியைக் காண்க

  • இரவிலே அநேகமாக அவள் தூங்கமாட்டாள். காது மந்தம்; கிழ வயது. தாழ்வாரத்துக் கீற்று இரட்டைகிரி இரவில் காற்றில் அடித்துக் கொள்ளும் போது யார் யார்?" என்று கேட்டு விட்டுப் பின்னர் விஷயத்தை யூகித்துக் கொண்டு பேசாது உறங்கி விடுவாள். மற்றும் நடு இரவில் கேட்காத சப்தங்கள் அவள் நுண்ணுணர்விற்கு எப்படியோ எட்டி யார்’ என்று கேட்டும் திருப்தி அடையாது, இருளின் பயத்தை, அவள் ஊன்றுகோல் உதைவின் டக்டக் சப்தத்தி ஞல் விரட்டுவது போன்று எழுந்து நடந்து ஒவ்வொரு இடத்தையுமே தடவித் தடவித் திருப்தியுற்று திரும்பி வந்து படுத்துக் கொண்டு விடுவாள்.'

நாகரிகத்தைப் பற்றி மெளனி குத்தலாகவும், நயமாக வும் எழுதியுள்ள வரிகள் ரசிக்கப்பட வேண்டியவை.

  • நாகரிகத்தையும், நாகரிகத்தில் ஜனங்கள் முன் னேற்றத்தையும் அவள் கண்டு கொள்ளாமல் இல்லை. சூன்யமூளையில் அழகற்று மிருக வேகத்தில் தாக்குவது போன்று நவநாகரிகம், அவளிடம் தன் சக்தியைக் காட்ட முடியாது. எத்தனையோ தலைமுறையாகப் பாடுபட்டுக் காப்பாற்றி வரப்பட்ட, மிருதுவாக உறைந்த குடும்ப லட்சியங்கள் உருக்கொண்டவள் போன்றவள் தான் அவள். வெற்று வெளியிலும் தாழ்ந்த இடத்திலும் பாய்வதுபோல வன்றித் தணிவு பெற்று, அழகுபட அமைதியுடன் தான் நாகரிகம் அவளிடம் இசைவு கொள்ளும்” (குடும்பத் தேர்)