பக்கம்:பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை.pdf/104

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

îùż பாரதிக்குப் பின் "நான்கைந்து பெண்கள் குதுரகலமாகப் பேசிக் கொண்டு எதிரே வருவதைப் பார்த்தான். அவர்களுடைய குதிகால் உயர்ந்த பூட்ஸ் அவர்கள் மூளையைவிடப் பள பளவென மின்னின. நாகரிகத்தில் நெளியும் அவர்கள் நடையோவெனில், அவர்கள் தலைவகுடைவிடக் கோணலாக அவனுக்குத் தோன்றியது." (நினைவுச் சுழல்) 'அழகின் பாழ்பட்ட வசீகரன்' 'உலகமே அநேக சப்தங்களிலும், இரைச்சலிலும், நிசப்தத் தோற்றம் கொண்டது.” "அவள் சங்கீதத்தின் ஆழ்ந்த அறிதற்கரிய ஜீவ உணர்ச்சிக் கற்பனைகள், காதலைவிட ஆறுதல் இறுதி எல்லேயைத் தாண்டிபரிமாணம் கொண்டன. மேருவைவிட உன்னதமாயும், மரணத்தைவிட மனத்தைப் பிளப்பதாயும் மாதரின் முத்தத்தைவிட ஆவலேத் துாண்டி இழுப்பதாயும் இருந்தன.' இவை போன்ற வரிகள் மெளனியின் தனித் தன்மைக்கு சான்று கூறும். இடையிடையே மெளனி கூறும் உவமைகள் புதுமையாகவும் ஆவருடைய வர்ணனை நடைக்கு எடுத்துக் காட்டுக்களாகவும் மிளிர்கின்றன. மெளனி கூறும் உண்மைகள் சாதாரணமான பழைய விஷயங்களேயாயிலும், அவரது எழுத்து நடையில் அவை புதுமையாக விளங்குகின்றன. “இரவின் வளைந்த வானக் கற்பலகையில், குழந்தைகள் புள்ளியிட்டது போல எண்ணிலாநrத்திரங்கள் தெரிந்தன, தத்தம் பிரகாசத்தை மினுக்கி மினுக்கி எவ்வளவு தான் கொட்டிடினும், அவைகளுக்கு உருகி மடிந்துபட அழிவே கிடையாது போல, ஜொலித்தன.”