பக்கம்:பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை.pdf/106

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

104 பாரதிக்குப் பின் சூனிய வெளியில் வாழ்க்கையின் லக்ஷயப் பாதையை அமைக்க, அவள் இரு விழிகளும் சுடரொளியாக அமைந்தன இவனக் கண்டான்." அவள் கண்களின் தோற்றம் தன் ஆட்சியை மீறி பழக்கத்தின் காரணமாகவே மனத்தில் தோன்றியதை விட்டு வேறு எதையோ குறிப்பது போலத் தான் அப்போதும் இருத்தது.' 'அவன் கருவிழிகள், அவளைத் தொடர்வதே போன்று, சவித்து நகர்ந்து சிற்சில சமயம், கண்களின் மூலையில் சொருகி மறையும். திரும்பியும் அவளை இழுப்பது போல் விழி நடுவில் பதியும், அதன் மூளையும், யோசனைகளும் உயர்ந்து உயர்ந்து, உருகலுற்றன; அழியலுற்றன.' 'இன்பமான இளம் வெய்யிலும், உடனே, அது மேகமறைப்புண்டு, சிறு மழைத்துளிகளும் போன்று, அவன் மூடிவ கண்களின்றும் கண்ணிர் சொட்ட ஆரம்பித்தது. மறுதரம் மேக மறைப்பு நீங்கி மழைத் துளிகளிலும் வேய்யிலேக் கானதிற்கும் சிறுவர்களே போன்று இவ்விருவரும் அவன் கண் திறப்பை ஆவலோடு நோக்கி நின்றிருந்தனர். அவன் கண்கள் திறக்கவில்லை. இவற்றைப் போல் இன்னும் பல காணலாம் அவர் கதைகளில். மென வியின் வர்ணிப்புகள் இதர கதாசிரியர்களின் வர்ணனைகளிலிருந்து மாறுபட்டே தோன்றுகின்றன. 'அவ்வூரின் குறுகிய வீதிகள், நேராக நீண்டு உயர்ந்த வீடுகளைக் கொண்டிருந்தன. மாலை வேளையில், வீடுகளின் மேற் பாகத்திலே சாய்ந்த சூரியக் கிரணங்கள் விழும்போது : ரகசியக் குகைகளின் வாய் போன்று, இருண்ட உள்பாகத்தை வீட்டின் திறந்த வாயில்கள் காட்டிநிற்கும். அது வா’ வென்ற வாய்த்திறப்பல்ல, உள்ளே சென்றதும் மறைந்து விடும் எண்ணங்களே விழுங்க நிற்கும் அசட்டு வாய்த் திறப்புப் போன்றுதான் தோற்ற மளிக்கும்.”