பக்கம்:பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை.pdf/108

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

106 பாரதிக்குப் பின் கோவில் மீது நின்ற சிலுவை, ஆன்மாக்களுக்கு ஆறுதல் கூறும் வகையில் கையை விரித்து ஆசீர்வதிக்கும் பாவனையில் தோன்றியது. ஒரு குடிகாரனுடைய உளறல் சப்தம் தூரத்தில் மறைந்து கேட்டுக் கொண்டிருந்தது. உலகத்தின் சிறு ஒளிக் காட்சி நிரம்பிய மனத்தில் தளும்பிய கண்களால் மெழுகப்பட்டது போன்றிருந்தது. ஒன்றும் நன்ருகத் தெளிவுபடாது எல்லாம் மங்கலாகத் தெரிந்தது. மனம் விரிவாகி எட்டிய வெளியில் சென்றது. (நினைவுச் சுழல்). கதாபாத்திரத்தை வர்ணிக்கும் முறையிலும் மெளனி த னி த் த ன் ைம கொண்டுள்ளார். உதாரணமாக "எங்கிருந்தோ வந்தான் கதையின் காணப்படுகிற இச்சித்திரிப்பை கவனிக்க: 'அவன் தோற்றத்தைக் கண்டு, சிறிது பிரமிப் படைந்தேன். சீவிக் கொள்ளாத நீண்ட இவன் முன்குடுமித் தலையும், அகலமான நெற்றியும், மகத்தான மூளை வன்மையின் அறிகுறி போலும். ஊடுருவிக் காது வரையிலும் கருத்து ஒடிய புருவங்களுக்கு வெகு ஆழத்தில், மங்கிக் களேப்புற்ற அவன் கண்கள் பதுங்கியிருந்தன. மூன்று தினத்திற்கு முன்பு ஒருதரம் அவனே நேருக்கு நேராக ஒரு கணம் சந்தித்தேன். கண்ணிர் வரண்டு சலனமற்று நிற்கும் அவன் கண்கள் திகைப்பும், வருத்தமும் புதைந்து பாழ்பட்ட கேணி போன்று தோன்றின. அவன் நம்மை உற்று நோக்கும் போது, அவனது பார்வை, நம்மை ஊடுருவிப் பிய்த்து, அமைதி அற நம்முள்ள சிலாகை கொண்டு துருவிப் பார்ப்பது போன்ற ஒரு உணர்ச்சி- ஓர் உயர் சக்தி நம்முன் நிற்கும் பயம்-இவை தான் நம் மனத்தை அலைக்கும். மூக்கு நீண்டு வளைந்து இருந்தது. மெல்லிய உதடுகள் சிறிது விலகி இருவரிசைப் பற்களை, கன் கூச, வெளிக்காட்டின. வாய் சிறிது பிளந்து நிற்கத் தோற்றிய ஆவன் தாங்க முடியாத பளுவை பெருமூச்