பக்கம்:பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை.pdf/110

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

Höß "தீபச் சுடர் சிறிது தூண்டி விடப்பட்டது; கோபமாகக் கடைசியில் எல்லாவற்றையும் பார்ப்பது போன்றே தான், நிமிர்ந்து ஜ்வலித்தது.” "அவள் நடை அழுத்தலாக அவளே முன் செலுத்தியது.” "காலடியினின்றும் மிக வெறுப்புற்றது போன்று பாதை தழுவி நகர்ந்தது.” "உலக இரைச்சலும் ஆரவாரிப்பும், ஆயிரம் வாயினின்றும் வெளிப்பட்டு அலறிக்குமைந்தன.” "மரக்கிளைகளில் பகதிகள் ஆரவாரித்தன. உலக அலுப்பே, குழறி முனகுவது போன்று அவை இடைவிடாது சிறிது நேரம் கத்தின.” - 'இரவின் இருளேத் திரட்டி அடிவானத்தில் நெருப் பிட்டதே போன்று கிழக்கு புகைந்து, சிவந்து, தணல் கண்டது." . 'காலடியும், ஒளி கொள்வது, இலேசுபடாது, புழுதிப் புகையைக் கண்டது.” இந்த விதமான பிரயோகங்கள் மெளனியின் உரை நடைக்கு ஒரு அழகும் அழுத்தமும் தனித்தன்மையும் சேர்க்கின்றன. சோகமும் சோர்வும், விரக்தியும் அலுப்பும், வெறுப்பும் வறட்சியும், பயனின்மையும் தோல்வியும் அடி நாதங்களாக ஒலிக்கின்றன. இதைகள் அவற்றுக்கு ஏற்ற சோற் கோலங்களை உரை தடையாகக் கொண்டு பின்னப் பட்டுள்ளன.