பக்கம்:பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை.pdf/115

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

13 H 3 தமிழ் உரைநடை தனவற்றைப் பொருத்திக் காட்டுகிற யதார்த்த நிலைகள் தனி அழகுடன் மிளிர்கின்றன. பரீட்சையில் தோல்வியுற்ற மாணவர்களைப் பற்றிக் கூறுகையில், இராக்காலத்து தூங்கு மூஞ்சி மரங்களின் இலைகளைப் போல் ஒடுங்கி துன்பப்பட்ட முகங்கள் எவ்வளவு" என்று அவர் குறிப்பிட்டிருக்கிரு.ர். நிலாவையும் நிலவொளியையும் பலரும் எப்படி எப்படி எல்லாமோ வர்ணித்திருக்கிருர்கள். ந. பி. யின் உரை நடையில் முற்றிலும் புதுமையான ஒரு சித்திரிப்பு காணக் கிடக்கிறது. - "இரவு. தலையெழுத்தே என்று நிவாச் சுருனே ஆகாயத்தை அரைகுறையாக மெழுகி வைத்திருந்தது.' அதேபோல, இருட்டையும் பழங்காலப் பஞ்சாயத்துத் தெரு விளக்கையும் ஒரு உருவகம் அழகாக அறிமுகப் படுத்துகிறது இப்படி வழியெல்லாம் சிம்கணிக்காய்கள் இருட்டில் சிகப்பு நாமம் சாத்தின.' இவ்விதப் புதுமையான உவமைகளை பிச்சமூர்த்தியின் உரைநடையில் அதிகமாகவே காணலாம். பிச்சமூர்த்தியின் உரைநடைப் படைப்புகளில் மன நிழல் கட்டுரைகள் குறிப்பிடத் தகுந்தவை; தனி ரகமானவை. மனநிழல் தொகுப்பு நூல் முன்னுரையில் சி. சு. செல்லப்பா கூறுவது பே ல, இக்கட்டுரையில் 'வித்யாசம் உருவத்தில் மட்டும் இல்லை. தொனி, நோக்கு, வெளியீடு இந்தத் தன்மைகளிலும் வித்யாசம். கட்டுரை என்கிற எல்லே, ஸ்கெட்ச், ஸ்கிட் என்ற ஆங்கிலப் பிரிவு களின் குணங்கள் இவற்றில் காணப்பட்டாலும், இந்த மூன்றுக்கும் மேற்பட்ட ஒரு புதுமைப் பாங்கு இவற்றில் காணமுடிகிறது. மன ஓட்டங்களையும் இயற்கை வர்ணனை யையும் தத்துவ நோக்கையும் கதையம்சத்தையும்