பக்கம்:பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை.pdf/116

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

### பாரதிக்குப் பின் கலத்திருக்கும் இவை தமிழ் இலக்கியத்தில் ஒரு புதிய உருவப் பிரிவை தந்திருக்கின்றன’’ குளவிக்கூடு, வெறும் செருப்பு, ஈப்புலி, சவுக்கைத் தோப்பு போன்ற சர்வசாதாரண விஷயங்களின் காட்சியில் ஆரம்பித்து, மனித இயல்புகள், அவை எழுப்பும் சிந்தனைகள், தத்துவக் கருத்துக்கள் முதலியவற்றை ந. பி. மனநிழல் கட்டுரைகளில் எழுதியிருக்கிரு.ர். இவை சிறு சிறு துணுக்குகளாகவும் ஒன்றரைப் பக்க-இரண்டு பக்கக் குறிப்புகளாகவும், பல பக்கங்களுக்கு வளர்ந்துள்ள கட்டுரைகளாகவும் அமைந்திருக்கின்றன. சிறிய விஷயத்துக்கு வனப்பு’ எனும் மன நிழல் உதாரணAாகும். 'முருகன் கோயிலில் மயில் ஒன்றிருக்கிறது. நாள் முழுதும் அங்கும் இங்கும் அகலந்து திரிந்து விட்டு பொழுது சாய்ந்ததும் கோபுரத்து உச்சாணியில் இருக்கும் யாளியின் தலையில் வந்து உட்கார்ந்து விடுகிறது-இரவைக் கழிக்க. அந்திக் காற்று மயிலின் மீது வீசும் பொழுது, தோகை கடல் லே போல் விசித்திர வனப்புடன் புரளுகிறது. அப்பொழுது அது உட்கார்ந்திருக்கும் உல்லாசத்தைப் பார்த்தால் தன் அழகுக்கு உன்னத ஸ்தானமும் கோபுரக் காற்றும் அத்தியாவசியம் என்று உணர்ந்திருப்பது போல் தோன்றுகிறது. கோபுரத்திலிருந்து கொண்டே இரவு முழுதும் ஜாமத்துக்கு ஜாமம் கூவுகிறது. , - ஆமாம். மயில் நினைப்பது மனிதனுக்கும் பொருந்தும், சந்தைக் கூட்டத்திலே வயிற்றைக் கழுவும் வல்லடி வழக்கில் மனிதன் ஈடுபட்டிருந்த போதிலும் உள்ளத்தின் வனப்பு குறையாமல் இருக்க வேண்டுமானுல் தனிமையின் கோபுரத்து உச்சியில் சற்று உட்கார்ந்துதான் ஆக