பக்கம்:பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை.pdf/118

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#16 பொசுக்குகிருன். சூரியனிடமிருந்து சக்தியைக் கடன் வாங்கும் சந்திரன், நமக்கு ஒளியையும் குளுமையையும்தான் தருகிமுன். சூரியனின் வெப்பத்தைச் சந்திரன் என்ன செய் தான்? அந்த அதிசயத்தின் ரகசியம் தான் என்ன? இப்படி இருக்கலாமோ? உண்மை என்று ஒன்றிருக்கின்றது. காலம் என்று மற்ருென்று இருக்கிறது. உண்மைக்கும் நமக்கும் இடையில் காலம் குறுக்கிடுகிறது. காலம் ஒரு மந்திரவாதி. நிகழ்ச்சிகள் நடந்து கொண்டிருக்கும் பொழுது, அவை களுக்கு புதிய வர்ணத்தைக் காலம் பூசிக்கொண்டே இருக் கிறது. அதன் விளைவாகத்தான் செத்தவன் கண் செந் தாமரையாகி விடுகிறது; தொடை நடுங்கி, வீரனைப் போல் மனத்தில் காட்சி அளிக்கிருன்...சூரியன் கிரணம் சந்திரனே அடையும் பொழுது, காலம் கடந்து விட வில்லையா? வெப்பத்தை மாற்றிக் குளுமை அளிப்பது காலத்தின் மாயாஜாலமா? அல்லது சூரிய வெப்பத்தை விழுங்கிவிட்டு அமுத ஒளி பொழியும் மாயவித்தை ஏதேனும் சந்திரனிடத்தில் இருக்குமா? சந்திரனிலிருந்து மனம் உண்டாகிறதென்று உபநிஷத் கூறுகிறது. ஜோதிடத்திலும் ச ந் தி ர ன க் கொண்டு மனதின் தன்மையை நிர்ணயிக்கிருர்கள். ஆகை யால், சந்திரனுக்குள்ள மாயசக்தி மனத்திற்கு இருக்கலாம் அல்லவா? இரும்பாணியையும் மண்ணேயும் தின்னும் நெருப் புக் கோழி மென்மையான அழகிய சிறகுகளைப் போர்த்திக் கொள்கிறதல்லவா? இந்த மாதிரி அற்புத சக்தி மனதிற்கும் இருக்குமா? இந்த சக்தியிலிருந்து பிறப்பதுதான் கலையோ? அல்லது வினையை விளையாட்டாக்குவது தான் கலையோ?” இவ்வாறெல்லாம் எண்ணங்களை வளர்க்கும் பிச்ச மூர்த்தியின் எழுத்து நடையில் குழப்பமூட்டுகிற தன்மையில் சொல் பின்னல் வேலைகள் இல்லவே இல்லை. .