பக்கம்:பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை.pdf/123

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் உரைநடை 121 கட்சிப் பணிக்கு இத்தகைய கடமை புணர்ந்த காவலர் தேவை. (வர்ளுஸ்ரமம்) தாழ்ந்து கிடந்த சமுதாயத்துக்கு விழிப்பும் வீர உணர்வும் புகுத்த வேண்டும் என்ற நோக்குடன், வரலாற்று திகழ்ச்சிகளை விறுவிதுப்பான நடையில் எடுத்துச் சொல்லும் கட்டுரைகள் i.Jół? எழுதியிருக்கிருச் அண்ணுதுரை, அவற்றின் ஆரம்பமே எடுப்பாக இருக்கும். ஒரு நாடகப் பாங்குடன் அது மேலே செல்லும். உதாரணமாக, “அந்த ஜூலை 141 என்ற கட்டுரையின் துவக்கப் பகுதியைப் பார்க்கலாம். "ஜூலை 14: உலக வரலாற்று ஏட்டிலே உன்னதமான இடத்தைப் பெற்றுவிட்டது. அந்நாளே வீர பிரஞ்சு மக்களின் வெற்றிநாள்! எதிரி நாட்டின் மீது போரிட்டுப் பெற்ற வெற்றியா? இல்லை! கொடுமையை எதிர்த்துக் கொடுங்கோலை எதிர்த்து, அன்று வரை குமுறிக் கிடந்த கூட்டம், அந்நாள் வரை அடக்குமுறையினல் தாக்கப்பட்டு அடிமைப்பட்டு, இம்மென்ருல் சிறைவாசம், ஏன் என்ருல் வனவாசம் என்ற நிலையிலே சிக்கிச் சிதைந்து, நசுக்கப்பட்டு தாதியற்றுக் கிடந்த மக்கள், நிமிர்ந்து நின்று, புனல் சொரிந்த கண்களினின்றும் கனலேக் கக்கி, பெருமூச்சை நிறுத்திப் பெருமுழக்கங் கிளப்பி, தருகதர்களின் தாளைத் தொட்டுக் கிடந்த கரங்களிலே, வானேந்தி, விடுதலை; விடுதலே! என்ற புரட்சி கீதம் பாடிக்கொண்டு படைபோல் திரண்டு, இடிபோல் ஆர்ப்பரித்து, புயலெனக் கோபத்தை வீசி போக போகத்திலே புரண்டு, பொதுமக்களைப் பொதி ஆாடுகளாக்கி, அரசியலைக் கொடுமைக் கருவியாகக் கொண்டு, மக்களைக் கசக்கிப் பிழிந்து, அவர்தம் மானத்தை மண்னெனக் கருதி, மதித்து, செருக்கு நிறைந்த சீமான்கள் எதேச்சாதிகாரம் செய்து வந்ததை ஒரே அடியில், ஒரே a str—&