பக்கம்:பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை.pdf/124

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

122 பாரதிக்குப் பின் நாளில், ஒரே பெரும் புரட்சியில், அடித்து நொறுக்கி, உருத்தெரியாதபடி அழித்த நாள் அந்த ஜூலை 14.” இப்படி வளர்கிறது இன்னும் மேலே "முகாரி முடிந்து அடாளு ஆரம்பமான தான்! மாடப்புரு வல்லுறைத் துரத்திய நாள்! மன்னர் மருண்ட நான்! சீமான்களின் தலை சிதறிய நாள்! மதுக்கிண்ணமேந்திய மகுேஹரிகளின் இதழ் தரும் சுவையிலே இகத்தின் ரசத்தைக் கண்டு, பரலோக ரசம் பாதிரியாரின் கைவசம் இருக்கிறது, கேட்டால் கிடைக்கும், அதற்காகத் தேடி அலை வானேன் என்று மதோன்மத்தர்கள் அரண்மனை செல்லப் பிள்ளைகள், ஆணவ சொரூபங்கள் ஆடிப் பாடிக் கிடந்த கோலாகலத்தை வேரறுத்த நாள் ஒடப்பரெல்லாம் உதையப்பரான நாள் விலங்கு பூட்டப்பட்டு வேதனையை அடைந்த கரங்களிலே வீரவாள் ஜொலித்த நாள் விடுதலை நாள்: வீரரின் வெற்றித் திருநாள்! வெறியரின் வீழ்ச்சி நாள்:” அண்ணு துரையின் எழுத்துக்களில் ஒரு குறைபாடு-ஒரு சிறு விஷயத்தை வைத்துக் கொண்டு அளவுக்கு அதிகமாக அளப்பது. சுருங்கச் சொல்கிற தன்மை அவரிடம் இல்லை. சுவையாகச் சொல்லப்பட்டாலும், தேவை இல்லாமலே சவ்வுயிட்டாய்த்தனம் பண்ணியிருப்பது பாராட்டக் கூடிய தாக இல்லை. மேடையில் மணிக்கணக்கிலே பேசும் பழக்கம் சிறுவிஷயத்தை மிகப் பெரிதாக வளர்த்தலையும், சொன்னதையே வெவ்வேறு விதங்களில் திரும்பத் திரும்பக் கூறும் தன்மையையும் அவருடைய இயல்புகளாகிவிட்டன. எழுத்து நடையிலும் அது பிரதிபலிக்கிறது. மக்களைக் கவரவேண்டும் என்பதற்காக அண்ணுதுரை யும் புராணங்களில் உள்ள ஆபாசங்களையும், கம்பராமா யணத்தில் கலந்துள்ள ஆபாசவர்ணனை எனத்தாம் கருதி „Á