பக்கம்:பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை.pdf/134

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#32 பாரதிக்குப் பின் காளானும் பூத்துவிட்டாற்போல் அவ்வளவு புராதன உணர்ச்சி பட ஆரம்பித்தது. முற்றத்தில் ஒரு மஞ்சள் பூனை வெயிலில் வெகு சுகமாய்க் கால்களை நீட்டியபடி உறங்கிக் கொண்டிருந்தது.” (சாவித்ரி) லா. ச. ரா. எழுத்தில் சித்தனை கனம் சேர்கிறபோது சாதாரண வாசகனுக்குக் குழப்பம் ஏற்படுத்துகிற சொற் பின்னல் தோன்றுகிறது. - "சில விஷயங்கள் சில சமயம் நேர்ந்து விடுகின்றன. அவை நேரும் முறையிலேயே அவைகளுக்கு முன்னும் பின்னும் இல்லை. அவை நேர்ந்ததுதான் உண்டு. அவை தோத்த விதமல்லாது வேறு எவ்விதமாயும் அவை நேரவும் முடியாது. நேர்வது அல்லாமலும் முடியாது. நேர்ந்த சமயத்தில் தேர்த்தபடி அவை நேர்வது அல்லாது முடியாது, நேர்ந்தமையால், அதனுல் நேர வேண்டியவையாய் ஆனதால் அவைகளில் ஒரு நேர்மையும் உண்டு. அந்த நேர்மை தவிர அவை நேர்ந்ததற்கு வேறு ஆதாரம் இல்லை. வேண்டவும் வேண்டாம். அவைகளின் ஸ்வரங்களே அவ்வளவுதான்." (தாrாயணி) 'அன்ருேடு ஜம்பு சரி. இனிமேல் ஜம்பு இல்லே. இல்லை. அப்படிச் சொல்வதும் தப்பு. ஜம்பு இருந்து கொண்டே இல்லை. இல்லாமலே இருந்து கொண்டிருக் கிருன்...' (சாவித்ரி) "மூடு சூளேயாய்ப் பேசுவதிலேயே எனக்கு ஒரு ஆசை இதுவரை அவளுடன் பளிச்செனப் பேசியதில்லை. மிருகங்கள் வாய் திறவாது ஒன்றையொன்று புரிந்து கொள்வது போல, நாங்கள் அர்த்தமற்ற, அல்ல, அர்த்தம் மறைந்த வார்த்தைகளைப் பேசியே ஒருவரை யொருவர் அர்த்தம் கண்டு கொள்வதில் ஒரு இன்பம்."