பக்கம்:பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை.pdf/135

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் உரைநடை 133 இத்தகைய விவரிப்புகளும், லா. ச. ரா, புரியாத விதத்தில் எழுதுகிருர் என்ற பொதுவான குற்றச்சாட்டுக்கு ஆதாரங்களாகின்றன. பாம்பு-நாத வெள்ளம் இவைகளை உவமைகனாகவும் உருவகங்களாகவும் அமைப்பதில் லா, ச. ரா.வுக்கு ஆர்வம் அதிகம். இயற்கை வர்ணனைகளிலும், கதாபாத்திர உணர்ச்சிகள் அல்லது மன நிலை வர்ணிப்பிலும் இவை விதம் விதமாக இடம் பெறுகின்றன. அழகிய சொற்கோலங் களாக அவை காட்சி தருகின்றன. ஒரு எடுத்துக்காட்டு: "எல்லா அரவங்களும் அடங்கிய அவ்வேளையில் தம்பூரிலிருந்து பொழியும் அவ்வோசை பாம்பு போல் அவள் மேல் வழிந்து கவ்விற்று, அது தன்னை விழுங்குவதை உணர்ந்தாள். நாத வெள்ளம் கிறுகிறுவென மூக்கு விளிம்பு வரை ஏறிற்று. மூச்சுத் திணறிற்று. இனி ஒன்றும் பண்ணு வதற்கில்லே எனத் தெளிந்ததும் திடீரென மட்டற்ற மகிழ்ச்சி அவளுள் பொங்கிற்று. அதில் தன்னை இழந்த மகிழ்ச்சியுடன் சமர்ப்பித்துக் கொண்டு, மழை தாளில் குழந்தைகள் விடும் காகிதக் கப்பல் போல், தான் சுழலில் அடித்துக் கொண்டு போவதை உணர்ந்தாள். அந்த மூல மூர்க்க ஆனந்தத்தில், மூழ்கித் திணறும் மூச்சு துணியில் கடைந்தெழுந்து எண்ணங்கள் உருவாகையில் அவை தண்ணிருள் பேசிய பேச்சுப்போல் சத்தம் இழந்து வார்த்தைகள் இழந்து வேகத்தில் வரம்புகளும் இழந்து வெற்ருய் நின்று பம்பரமாய் ஆடும் ஒன்றிலிருந்து வெறும் நீயும் நானுமாய்ப் பிரிந்து அவைகளின் ஜீவளுய் மாத்திரம், சுருதியோசை வெள்ளத்தில் நீந்துகையில், உடல் தாங்க முடியாது மூர்ச்சையில் மூழ்கிப் போளுள். (தாrாயனி) இவ்வாறெல்லாம் அவர் எழுதியிருப்பனவற்றைப் படிக்கிறபோது-அவருடைய கதாபாத்திரம் ஒன்று கூதுல்து