பக்கம்:பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை.pdf/14

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#2 பாரதிக்குப் "இன்றைய தமிழ் வசன நடை"யை ஆராய்ந்திருந்த மு. அருளுசலம் விருப்பு வெறுப்பு அற்ற முறையில் ಬು வித வசனங்களையும் சீர்தூக்கிப் பாராததுதான் காரணம ஆகும். பண்டிதர்கள், மறுமலர்ச்சி எழுத்தாளர்கள், பத்திரிகைக்காரர்கள் எல்லோரையுமே சாடியிருந்தார் அவர், பழமை நடையையும், புதுமைப் போக்கையும் பரிகசித்து, உற்சாகமாகக் கிண்டல் பண்ணியிருந்தார். பழந்தமிழ் நடையை, கடுந்தமிழ், பண்டிதத் தமிழ், தேர்வடத் தமிழ், நிகண்டுத் தமிழ். எதுகைமோனைத் தமிழ், பாட்டுத் தமிழ், வடமொழித் தமிழ், தனித் தமிழ் என்று வகைப்படுத்தியும், புதுத் தமிழ் நடையை மறுமலர்ச்சித் தமிழ், சொக்கும் தமிழ்,மின்னற் சிலம்பத் தமிழ்,அக்மாமித் தமிழ், ஆண் ஜாதித் தமிழ், துள்ளல் தமிழ், குருவளித் தமிழ், ஹாஸ்யத் தமிழ் என்று பிரித்தும் கேலிபண்ணியிருந் தார். மேலும். பாதிரித் தமிழ், மொழிபெயர்ப்புத் தமிழ், பத்திரிகைத் தமிழ், சர்க்கார் தமிழ், விளம்பரத் தமிழ், படுதல் தமிழ், பண்ணித் தமிழ் என்றும் பரிகாசம் செய்திருந் தார். எதையுமே மு. அருளுசலம் விட்டுவைக்கவில்லை. அவருடைய அபிப்பிராயப்படி நல்ல தமிழ் நடை எழுதியவர்கள்: "தமிழ்ப் புலவர் குழாம். ஆறுமுக நாவலர், செல்வ கேசவராய முதலியார், மகாமகோபாத்தியாய டாக்டர் சாமிநாதையர். அரசியற் குழாம்: இதில் பாரதியார் பெயரைச் சொல்லலாம். இதைச் சொன்ன பிறகு சொல்வதற்கு வேறு பெயர் இல்லை. மறுமலர்ச்சிக் குழாம். தீபன் (செல்லையா என்னும் தீத்தாரப்பன்) மறுமலர்ச்சி எழுத்தாளர் என்று கொண்