பக்கம்:பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை.pdf/140

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#38 பாரதிக்குப் பின் ஆகும்; அதல்ை நல்லது நேராது என்பது மக்களின் நம்பிக்கை. கர்ணன் மனைவிக்கு, அவன் தேரோட்டி மகன் என்பதால், அவனிடம் மரியாதைக் குறைவு. ஆகவே, "தலைக்கு ஊற்றிக் கொண்டு அவள் அவனை அனுப்புகிருள். அவன் திரும்பி வரவேயில்லை. இதை, பட்டனத்து பாஷையில் சொல்லும் ரசமான கதை அது. லா. ச. ரா. பட்டனத்துக் கொச்சை மொழியிலும் கதை எழுதியிருக்கிருர்; பண்பட்ட உயர்குடியினரின் பேச்சு மொழியிலும் கதைகள் படைத்திருக்கிரு.ர். ஆஞல், லா. சி. ரா. வின் எந்த ஒரு கதையும் ஆரம்பம் முதல் முடிவு வரை ஒரே உத்தியில் அமைவதில்லை. ஒரே கதையில் பல்வேறு முறைகளையும் கையாள்வது அவருடைய இயல்பு. ஒரு பாத்திரம் ஒன்றைச் சொல்லத் தொடங்குவது, நினைவுகூர்தல், நனவோட்டம், ஆசிரியர் கூற்று, உரையாடல்-இப்படிப் பல வழிகளும் கலந்து கிடக்கும். கொச்சை நடை நிறைய வந்து, திடீரெனக் கவிதை நடையாக மாறி, சிக்கல் தடையாகப் பின்னி, சித்திர நடையாக மலர்ந்து-இவ்வாறு அற்புதங்கள் பூக்கும் அநாயாசமாக அவரது எழுத்துக்களில். குப்பத்துச் சிறுவனும், அவன் அப்பனும் பேசிக் கொண்டிருப்பதாக ஒரு கதை ஆரம்பிக்கிறது. குப்பத்து பாஷைகூட லா. ச. ரா. எழுத்தில் ஒரு அழகு பெறுகிறது. அதில் ஒரு இடம்- . "நீ இந்தக் காரைப் பாத்தில்லே. நாளைக் காலேலே காட்றேன் பாரு, நீளமா சுமா வய வயன்னு-ஆ? அன்னைக்கு செங்காவி அப்பனும் நீயுமா, கட்ட மரத்துப் பின்னலே போட்'டாட்டமா ஒட்டியாந்தீங்களே ஒரு ராச்சஸ் மீனு, அது மாதிரி......சுமா வயவயன்னு மூஞ்சிலே ரெண்டு லைட்டு முழியாட்டம் முழிக்கிது. நான் அதன் ஒடம்பை தொட்டுப் பார்த்துட்டேருந்தேன். ஆசிையா