பக்கம்:பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை.pdf/141

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் உரைநடை 139 இருந்திச்சிப்பா! அப்போ டிட்டத்துலே பட்டுனு ஒரு உதை விளுத்துச் சுப்பா. கீளே வியுந்துடற மாதிரி கால் அப்படியே மடிஞ்சி போச்சு. யம்மாடி"ன்னு கத்திட்டு திரும்பிப் பாத்தேன்; யமனுட்டம் நிக்கிருன்!” இந்த சம்பாஷணை வளர்ச்சியில், பின்னர் அவன் சொல்கிருன்: "அவனேப் பத்தி தமக்கென்னப்பா இப்போ? நான் இப்போ சொன்னேனே இந்த மீனு இது அலை மேலே தள்ளி வந்து மணல்லே அப்படியே சொருவிக்கிட்டுது. மூஞ்சி தெரியல்லே. கரை மேலே நான் நண்டு துரத்திட்டிருந்தேன். அப்போ வாலு மாத்திரம் ரெண்டு இலை முளைச்சாப்பிலே வெளியிலே நீட்டித் துடிச்சுட்டிருந்தது. என்ணுதுன்னு புடிச்சு இளுத்துப் பாத்தா, மீனு! நல்ல அயகு அப்பா மின்னலே நீலம், பின்னலே செழுப்பு. நடுவுலே வெள்ளை. சூரியன் மூளைக்கறத்துக்கு முன்னலே கடல் மேலே மானம் டாலடிக்குது பாரு அப்பா, அதுமாதிரி. இன்னும் உசீர் போவல்லே. வாயை ஆவ் ஆவ்னு தொறந்து தொறந்து மூச்சுக்குத் தேடித் தவிக்குது. அதும் கண்ணே நெனச்சகா கஸ்டமாயிருக்குது அப்பா, கஞ்சிப்பானைக் கூடையோடே உனக்காகக் கரை மேலே காத்திட்டிருந்தா ஆத்தா-இதர பாரம்மான்னு கையிலே புடிச்சுக்கிட்டு ஓடினேன். என் கிட்டேருந்து புடுங்கி கூடையிலே போட்டுக்கிட்டு ஆத்தா என்னை அப்படியே இஸ்து கட்டி அணேச்சுக்கிட்டது. அந்த மீனு ஆம் விட்டா ரொம்ப ரொம்ப அதிஸ்டலாம்பா!' அடுத்த பாரா அப்பனின் ரீனேவை- நம்ம அதிஸ்டம் தான் தெரிஞ்சிருக்குதே இன்ணைக்கு என்ற ரீதியில்விரிவாகக் கூறுகிறது. பிறகு சம்பாஷணை. கதை வளர்ச்சியில், ஒரு பாராவிலேயே வெவ்வேறு உத்திகள் கலந்து விடுகின்றன; அது ஆசிரியர் விவரிப்பாக ஆரம்பிக்கிறது: