பக்கம்:பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை.pdf/143

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் உரைநடிை #4? இந்த உசிர் இருக்கிற வரைக்கும், இந்த ஒரு சாண் வவுத்தை வளர்த்து எப்படியாவது புளேக்கணும்னு தானே, மனுசன் நாலு பேரோடே கூடருன், பிரியருன், சண்டை போ-முன். சமாதான மாவருன் இடையிடையே மாரியாத்தா, வாந்திபேதி, ஒண்ணுமில்லாட்டா வயசு, எல்லாம் அவனை வாரியடிச்சிட்டுப் போவுது. அப்பவும் இந்த உசிரிலே இருக்கிற ஆசையை என்ஞன்னு சொல்றது. எல்லாமே அதிலேதான் அடங்கியிருக்குதுங்க. சாமி, பூதம், பிசாசுகூட பயிர் தண்ணிக்குக் காஞ்சா, கொடும்பாவி கட்டியிளுத்து ஆளுவருன். தண்ணி சாஸ்தியாப் போன, கங்கம்மாளுக்கு ரவிக்கை, மஞ்சா, விளக்கு எல்லாம் முறத்திலே வெச்க தண்ணியிலே விடருன். கோவமடங் கணும், வாழவைக்கனும் தாயேன்னு னல்லேயம்மனுக்குப் பூசை போடருன். என்னத்துக்கு சொல்ல வந்தேன்ன இந்த நம்பிக்கைன்னு ஒண்ணு இருக்குதே அதிலே அவ்வளவு இருக்கு து-உடம்பிலே இருக்குதே அது உசிரில்லே' நம்பிக்கைதான் உசிர்.” - மேல்தட்டு மனிதர்’களின் பேச்சு முறைகளை லா, ச. ரா.வின் பெரும்பாலான கதைகள் சித்திரிக்கின்றன. பேச்சு நடை யானுலும், கனவு, நினைவு, நனவோட்டம் எந்த முறையாயினும், லா, ச. ரா.வின் உரைநடை திடீரென்று கவிதைத் தன்மை பெற்று விடுவதையும் அவருடைய கதைகளில் காண முடியும். ஒரு சிறு சொல்கூட லா. ச. ரா.-வின் கவி உள்ளத்தில் இனிய சிலிர்ப்பு ஏற்படுத்திவிடும். உஷை என்ற சொல் எவ்வளவு கிளர்ச்சி உண்டாக்கி விடுகிறது. பாருங்கள், அவர் உள்ளத்திலே! "எவ்வளவு அழகான பெயர்! உஷை, உன் பேரை தாக்கில் உகுட்டுகையில், மனத்தில் என்ன என்ன