பக்கம்:பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை.pdf/144

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

i4% தோற்றங்கள் எழுகின்றன தெரியுமா? அதுவும் எல்லாம் ஒரே சமயத்தில்! பட்சிகளின் கோஷ்டி கானம். சேவலின் அறைகூவல். பசுக்களின் கழுத்து மணிகள். கன்றுக் குட்டிகளின் அம்மே”! வயல்களின் பச்சைக் கதிர்கள் பேசும் ரகசியங்கள். காய்களின் மேல் படரும் செந்திட்டு. ஏற்றச் சாவிலிருந்து சரியும் ஜலத்தின் கொந்தளிப்பு. அதுவே பூஞ்செடிகளின் அடியில் பாய்கையில், மாறும் கிளுகிளுப்பு. அப்பொழுது தான் பூத்த மலர்களின் புது மணம். உஷக்காலப் பூஜையின் ஆராய்ச்சி மணி. கோபுர ஸ்தூபியின் தகதகப்பு, வாசற் குறடுகளின் மேல் பிரம்மாண்டமான கோலங்கள்." 'உஷை! இரவின் இருளைக் கிழித்துக் கொண்டு புறப்படும் உதயத்தின் தேவதை. என்ன தைரியமான - லா. ச. ரா.வின் மனவளம் தனித்தன்மையானது. எனவே, அவருடைய உரைநடையும் தனி ரகமானது, எவராலும் பின்பற்ற முடியாதது.