பக்கம்:பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை.pdf/148

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#46 பாரதிக்குப் பின் "பின்கட்டிலிருத்து அவன் வெளிப்பட்டாள். நெற்றி யும் கன்னங்களும் சந்தன. வெண்மையில் பளிரிட்டன, காதோரங்களில் மயிர்ச் சுருள்கள். ஈரத்தில் கன்னங்க ளோடு ஒட்டிக்கொண்டிருந்தன. வெள்ளே விழிமேட்டில் செந்நரம்புக் கொடிகளின் நடுவில் சாறு ஓடும் கருவிழிகள் உட்கார்ந்திருந்தன. அவள் அவர்கள் பக்கம் கன்னெடுத்துக்கூடப் பார்க்க வில்லை. கூடத்துக்கும் சமையலறைக்கும் காரியமாய் விடு விடென அலேந்தாள். கால் மெட்டிகள் கோபத்துடன் *னக் ணக் என்றன. அவன் கண்கள் அவள் தோன் வளைவுகளையும் இடுப்பி லிருந்து அகன்று வளைந்த உருவக் கோடுகளுள் வேகமாய்க் குழையும் அங்க அசைவுகளையும் விழுங்கின. அவனில் ஒரு பாதி பீசிந்து அவளோடு இணைந்தது. ஊஞ்சலில் உட்கார்ந் திருந்த குறை நிலை அவளேயும் ஆவலோடு இணைந்த மறு பாதியையும் கவனித்துத் தவித்தது. சுவாமி விளக்கை ஏற்றுகிருள். குச்சியிலிருந்து சுடர் சீறிக் குதித்து விளக்குத் திரிக்குத் தாவுகிறது. விளக் கெதிரில் விழுந்து அவள் சேவிக்கையில் அவளைக் கவ்விஞற் போலேயே அவன் நிழலும் அவள் உருவக்கோட்டுடன் குணிகிறது. பெரு விளக்கில் அகல் விளக்கை ஏற்றிக் கொண்டு அவன் பக்கமாய் முற்றத்தை நோக்கி வருகிருள். ஊஞ்சல் சங்கிலியை உராய்ந்து அவள் கன்னத்தைத் தொட அவன் கைகள் துடித்தன. சுடரை அணைத்த விரல் சந்துகளில் குங்குமச்சாறு போல் ஒளி வழிகின்றது. அவள் எங்கோ வெகு தூரத்தின் விளிம்போரத்தில் பாடுகிருள். துளசி மாடத்தில் விளக்கை வைத்துவிட்டு