பக்கம்:பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை.pdf/15

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் உரைநடை #3 டால், இவரைத் தவிர வேருெருவரைச் சொல்ல இடமில்லை." இவர்களது தமிழ் நடையோடு, அன்று (1945ல்) உயிருடனிருந்து பேசியும் எழுதியும் வந்தவர்களில் நால்வர் எழுதியது தான் நல்ல தமிழ் நடை ஆகும் என்றும் மு. அருணசலம் உறுதியாய் அறிவித்திருந்தார். திரு. வி. கலியாணசுந்தர முதலியார், வெ. சாமிநாத சர்மா, ரா. கிருஷ்ணமூர்த்தி ( கல்கி'), டி. கே. சிதம்பரநாத முதலியார் ஆகியோர் தான் அவர்கள். முடிவாக, நல்ல தமிழ் நடை-இலக்கிய தடைஎவ்வாறு இருக்க வேண்டும் என்றும் இலக்கணம் வகுத்துக் கோடுத்து, அப்படி எழுத எண்ணுகின்ற எழுத்தாளர் தமிழகத்தில் பிறப்பார்களாக என்று புத்தகத்தை முடித் திருந்தார் மு. அருளுசலம். வளரும் தமிழ் வசன நடையை சீர்தூக்கிப் பார்க்க முற்பட்ட அறிஞரின் முயற்சி புதுமையானதுதான். எளிமையும் தெளிவும், இவற்ருற் பிறக்கும் நற்பயனுமே தமிழ் வசன நடைக்கு இன்று முதன்மையானவை என்ற கருத்தோடு, பலவித நடைகள் இப்புத்தகத்தினுள் சீர்தூக்கிப் பார்க்கப் பெற்றுள்ளன என்று அவர் குறிப் பிட்டிருப்பினும், பலவித நடைகளுக்கும் அவர் நியாயம் வழங்கவில்லை என்பதையே அந்தப் புத்தகம் நிரூபித்தது. குறிப்பிட்ட சிலர் எழுதுவதுதான் சிறப்பான நடை என்ற முடிந்த முடியுடன் அவர் இதர எழுத்தாளர்களின் எழுத்துக்களை அணுகியதும், எல்லோரது எழுத்து நடைகளுமே பரிகாசம் பண்ணப்பட வேண்டியவைதான் என்ற எண்ணத்தோடு உதாரணங்களைத் தேடிக் கண்டு எடுத்திருந்ததும் அவ் அறிஞரின் குறைபாடுகள் ஆகும்.