பக்கம்:பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை.pdf/152

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#50 பாரதிக்குப் பின் மெளனி கதையில் இது வருகிறது "பின்னின்று யாரோ அவனே அணைத்ததென உணர்ந்த ஒரு இன்பம்...ஆதாரமற்று நினேப்பதிலும் அதிர்த்து இடிய, வடிவாகும் கற்பனேக் கோட்டை. அணேத்த கை சர்ப்பமாக அன்ருே அவன் மேல் நெளிந்தது! ஆம், சர்ப்பம் ...ஒன்றல்ல. சர்ப்பங்கள் அவன் மேல் சுற்றி, ஆசை கொண்டு, அவன் முகத்தை முகர்ந்து முத்தமிடும் ஆர்வ த் தில்-நீட்டி விழுங்கும் அவைகளின் நாக்குகள் . அவை ஒளிக்கதிர் சட்டிகளா! அதனுல் அ ந் த ப் பயங்கர அணேப்பைத் தாங்க முடியவில்லை. பயங்கரமும் அருவருப்பாக மாறி உடம்பில்நெளிகிறது. அந்த அணைப்பினின்றும் திமிறி விடுவித்துக் கொள்ளுவ தற்குத் தான் போலும் அவன் உடம், மயிர் கூச்செறிந்தது தன்னை எந்நிலையினின்றும் விடுவித்துக் கொண்டான் என்பது தெரியாதெனினும் ஒரு பயங்கரக் கனவிலிருந்து விடுவிக்க விழிப்புக் கொண்டது போன்றதொரு உணர்ச் சியை அவன் நெஞ்சம் கொண்டது. அந்த இருளில் வெளி யில் கலகலவென நகைத்ததென ஒரு சப்தம் கேட்க, ஒளி கொண்ட ஏதோ ஒன்று உருவாகி எட்டிய வெளியில் மிதந்து சென்றது.’ (மனக்கோலம்) அா. ச. ரா. கதையிலிருந்து ஒரு உதாரணம்: 'எல்லா அரவங்களும் அடங்கிய அவ்வேளையில் தம்பூரிலிருந்து பொழியும் அவ்வோசை பாம்பு போல அவள் மேல் வழிந்து கவ்விற்று. அது தன்னை விழுங்குவதை உணர்ந்தாள். நாதவெள்ளம் கிறுகிறுவேன மூக்கு விளிம்பு வரை ஏறிற்று, மூச்சுத் திணறிற்று. இனி ஒன்றும் பண்ணுவதற்கில்லை எனத் தெளிந்ததும் திடீரென மட்டற்ற மகிழ்ச்சி அவளுள் பொங்கிற்று. அதில் தன்னை இழந்து மகிழ்ச்சியுடன் சமர்ப்பித்துக் கொண்டு, மழை தாளில்