பக்கம்:பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை.pdf/158

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

19. சி. சு. செல்லப்பா உரைநடை குறித்து அதிகம் சிந்தித்த எழுத்தாளர் சி. க. செல்லப்பா. பேசுவது போல் எழுத வேண்டும்: எல்லோருக்கும் புரியக் கூடிய விதத்தில் எழுத்து தடை அமைய வேண்டும் என்ற கருத்து அவருக்கு உடன் பாடானது அல்ல. "எல்லா விஷயங்களுக்கும் ஒரே மாதிரியான நடை தகுதி உள்ளதாக ஒரு போதும் இருக்காது. அதே போல, தாம் பேசுகிற தோரணை மாதிரியே எல்லாவற்றையும் எழுதிவிட முடியும் என்பதும் இல்லை’ என்று உறுதியாக நம்பியவர் அவர். எல்லோருக்கும் விளங்க வேண்டும் என்ற எண்ணத் தோடு அனைத்து விஷயங்களையும் எளிய நடையில் எழுத விரும்புவது ஸ்டாண்டர்ட் தமிழ் ஒன்றை உண்டாக்குகிற முயற்சியேயாகும். இம்முயற்சி தமிழை வளமான மொழி யாக வளர்க்காது என்று செல்லப்பா அழுத்தமாகக் குறிப் பிட்டிருக்கிரு.ர். 'கருத்துக்களை கொஞ்சமும் தடங்கலோ தடுமாற்றமோ இல்லாமல் முழுமையாகவும் திட்டமாகவும், படிப்பவன் மனதுக்குத் தெரியச் செய்வதுதான் நல்ல உரைநடை என்ற பொதுவான ஒரு விளக்கத்தை ஒரு வரையறுப்பாக வைத்துக் கொள்ளலாம். கைக்குக் கை வளர்ந்து வரும் தமிழ் உரைநடை பற்றி இலக்கணம் ஆறுதியிட்டுச் சொல்ல