பக்கம்:பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை.pdf/161

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் உரைநடை 1:9 போட்டும் ஒரு ஆசிரிய அக்கரையுடன்-கலந்து இருக்கிறது. கதையின் உச்சநீலகில் அவர்களது ஏன் நிலை தான் நமக்குன் ரீங்காரமிடச் செய்வதாக இருந்திருக்க வேண்டும். உச்சநிலை அந்த இடத்திற்கும் சற்று முன் நீண்டு மாதவன் படிப்பை நிறுத்தியது ஏன் என்ற சினேகிதர்களது ஏன், சுசீலாவின் கண்களில் தோன்றும் சோகத் தோற்றம் ஏன் என்ற அவள் கணவனது ஏன், எல்லாம் தெரிந்தும் ஒன்றும் தோன்ரு மல் மனம் புகையும் கதை சொல்லி நண்பனது புரியாமை (அதுவும் ஒருவித ஏன்தான்) ஆகியவை கதையின் ஒரு முனைப்புக்கு ஏற்றம் தருவதாக இல்லாதது மட்டும் இன்றி, கதையின் உருவத்துக்கும் உத்தேச நிறைவேற்றலுக் ஒம் குந்தகமாக, பிரஸ்தாப தகவல்கள் மூலம் நமக்குள் உருவாகி இருக்கும் ஒரு கவனத் தீவிரத்துக்கு தணர்வு தருவ தாயும், ஏன், கவன முனைப்புக்கு பராக்கு (கவனத் திருப்பம்) காட்டுவதாகவும் கூட இருக்கிறது." (மெனணியின் மனக் கோலம்” கட்டுரையில் ஏன்? என்ற கதையைப் பதிறி எழுதியுள்ள பகுதி.) இப்படி வித்தியாசமான வெவ்வேறு வகைப்பட்ட உரை நடையை செல்லப்பா சோதனைரீதியாகக் கையாண்டு பழகி, தனக்கென்று ஒரு இயல்பான நடையை உண்டாக்கிக் கொண்டார். இதல்ை எல்லாம், செல்லப்பா நல்ல தமிழ் எழுதுவதை மறந்துவிட்டார் என்றும், தெளிாைக எழுதுவது எப்படி என்பதே செல்லப்பாவுக்குத் தெரிய வில்லை என்றும், குறைகூறல்கள் எழுந்தன. அவற்றை அவர் சட்டை செய்யவில்லை. சி. சு. செல்லப்பா உரைநடை குறித்து மற்ருெரு விஷயத்தையும் சுட்டிக்காட்டினர். உலக இலக்கியத்தில் புகழ்பெற்ற படைப்பாளிகளின் எழுத்துக்களை-உதாரண மாக, டால்ஸ்டாய், செகாவ், துர்கனேவ் முதலியவர்களின் படைப்புகளை-ஆங்கி லத் தி ல் மொழிபெயர்த்தவர்கள்