பக்கம்:பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை.pdf/162

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#50 பாரதிக்குப் பின் "ஸ்டாண்டர்ட் நடை எதையும் கையாளவில்லே. அந்த அந்த ஆசிரியர்களின் தனித்தன்மை நன்கு வெளிப்படும் விதத்தில் வித்தியாசமான ஆங்கில நடையில்தான் எழுதி யிருக்கிரு.ர்கள். ஆனல் தமிழில் மொழிபெயர்க்கிறவர்கள் எல்லாப் படைப்பாளிகளின் எழுத்துக்கள44 ஒரே மாதிரி யான எளியநடையில் தான் பெயர்க்கிருர்கள். இது மூல ஆசிரியனது எழுத்து நடையின் சிறப்பை எடுத்துக் காட் டாது. வார்த்தைக்கு வார்த்தை மொழி பெயர்ப்பது’ தான் படைப்பாளிக்கு நியாயம் செய்வது ஆகும் என்று சி. சு. செ. வலியுறுத்தினர். அவ்வாறே அவர் அநேக கதைகளை மொழி பெயர்த்து *எழுத்து பத் தி ரி ைக யி ல் வெளியிட்டார். ஹென்றி ஜேம்ஸின் புரூக் ஸ்மித் கதையை மொழிபெயர்த்த செல்லப்பா முன்னுரையாக எழுதிய வரிகள் உரைநடை பந்திய அவரது கருத்தை தெளிவாக எடுத்துச் சொல் "ஹென்ரி ஜேம்ஸின் நடை கருத்தாழமான சிக்கலான, சுழற்சியான நடை, படிக்க முடியாதபடி செய்யும் அளவுக்கு கூடமானது என்று கூடக் கருதப்பட்டது. ஆளுல் அதில் ஒரு இறுக்கம், திட்டம், நேர்த்தி இருக்கும். வாக்ய அமைதி புதுத் தோற்றங்களைப் பெற்றிருக்கும். இசாற்கள் சேர்க்கை புது அர்த்தச் சாயல்களே ஏற்றி இருக்கும். அதை மொழி பெயர்ப்பது சற்று கடினமானதுதான். 'மொழிபெயர்ப்பு சம்பந்தமாக ஒரு வார்த்தை. வார்த்தைக்கு வார்த்தைமொழி பெயர்ப்பது, கயஒட்டமாக மொழிபெயர்ப்பது என்ற இரண்டு விதங்களிலும் குறை, நிறை இருக்கிறது. இந்த மொழி பெயர்ப்பு முன் வழியில் செய்யப்பட்டிருக்கிறது. மூல ஆசிரியனது உரைநடைப் போக்கிலேயே தமிழுக்கும் ஒரு உரைநடையை இயைவிக்கும் ஒரு தோரணை கையாளப்பட்டிருக்கிறது. கருத்துக்களையும்