பக்கம்:பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை.pdf/168

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

166 பாரதிக்குப் பின் (ஏனென்ருல்), எடுத்துக்கலாம் (எடுத்துக் கொள்ளலாம்), பாதுகாத்துக்கிறது (பாதுகாத்துக் கொள்கிறது), காப் பாற்றிக்கிறது, அதுக்கு (அதற்கு) இது மாதிரியான வார்த்தைகளையும் கொச்சை நீக்கிய இலக்கண சுத்த வார்த்தைகளாக அங்கீகரித்தால், இவைகளால் ஆன எழுத்து உரைநடை, பேச்சுநடையின் ஒலி நயம் ஒசை அமைப்புக்கு ஏற்ப அமையும். இன்று எழுத்து நடைக்கும் பேச்சு நடைக்கும் இருக்கிற வித்தியாசம் குறையும்: இறையவும் செய்யும். ஒவி இயல்பும் சொல்லமைதியும் சொல் தொகுதியும் சொற்பொருளும் காலத்துக்குக் காலம் மாறி வந்து, இன்றும் வாழும் தமிழ் இல்லையா நம்மது?" செல்லப்பா எழுத்து காலத்தில் இந்த விதமான உரை நடையை தனது கட்டுரைகளில் கையாண்டார். அவர் எப்போதும் சிக்கலான, சுற்றி வளைக்கிற, மரபுகளை மீறிய உரைநடையைத் தான் கையாண்டார் என்று எண்ணிவிடக் கூடாது. சிறுகதைகள் எழுதிப் புகழ்பெற்ற செல்லப்பா பலரகமான கட்டுரைகளையும் எழுதியிருக்கிருர். கட்டுரை இலக்கியத்திலும் சோதனை ரீதியில் அவர் பல முயற்சிகள் இசய்துள்ளார், "கடி ஸ்ட் ஸ்டோரி என்ற சிறுகதையும் ஆகாத, எஸ்வே என்ற கட்டுரையும் ஆகாத, இரண்டும் கெட்டான் நிலையில் ஸ்கெட்ச் என்ற ஒரு பிரிவில்...ஆழ்ந்த கருத்துக்கு உட்பட்டதாகவும், சில ஹாஸ்யப் பாங்கானதாகவும் இருக்கும்" படைப்புகளே அவர் அதிகம் எழுதியிருக்கிரு.ர். அவை தவிர ஸ்கிட்’ என்ற உரைநடைப் பிரிவிலும் அவர் பலப்பல படைத்துள்ளார். இவை குறித்த அவரது விளக்கம் கவனிப்புக்கு உரியது: 'ஸ்கெட்ச் என்பது சிறுகதை போலவோ கட்டுரை போலவோ தோன்றும் ஒரு இலக்கிய உருவம். ஆளுல்