பக்கம்:பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை.pdf/169

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் உரைநடை 167 லைட்டாக என்கிருேமே படிக்கும்போது அலட்டவோ, அழுத்தவோ செய்யாமல், லெகுவாக விழுங்கக் கூடியதும் ஜீரணமாகக் கூடிவதுமான தின் பண்டம் போல ருசிக்கக் கூடியதாக இருக்கும். உருவத்தை, விஷயத்தை கையாளும் முறையில், உத்தியில், ஒரு மென்மை, எளிமை, தீவிரமின்மை, மெலிவு இருக்கும். நடையில் எழுத்துப் பாணியில் விஷயத்திலிருந்து தடம் ஆங்கங்கே லேசாகப் புரண்டும் சிக்கனம் இன்றியும் இறுக்கம் இல்லாமலும் கூட இருக்கும். பழக்கமான விஷயமாகவும் இருக்கும். 'ஆளுல் ஸ்கிட்டோ இந்த தன்மைகளை பெரும்பாலும் கொண்டிருந்தாலும் கதை அம்சம் கொஞ்சம் கூடுதலாக இருக்கும். நகைச் சுவையானதாகவும் சீரியஸ் என்கிருேமே ஆழ்ந்த கருத்தானதாகவும் இருக்கும். சிறுகதை அளவுக்கு போயிருப்பது போல தோன்றும். ஆளுல் சிறுகதை அளவுக்கு முடிவு கொள்ளாமல், டிரமாடிக்’ என்கிற நாடகத் தன்மை திருப்பம் கொள்ளாமல், ஒரு ஸ்கேட்ச் அளவுக்கும் கொஞ்சம் கூடுதலாக தணிந்த பொருள் தொனியும், அமைப்பு விடைப்பும் கொண்டு, ஸ்கிட்டுக்கும் சிறுகதைக்கும் உள்ள எல்லேக்கோடு கூட அழித்து விடக் கூடிய ஒரு நிலை கூட ஏற்படும்படியாக ஸ்கிட் மாயத் தோற்றம் காட்டும்.' இவ்வாறு வெவ்வேறு வடிவங்களைப் பற்றியும் ஆழ்ந்து சிந்தித்து, தெளிவான விணக்கம் தந்துள்ள தமிழ் எழுத்தாளர் சி. சு. செல்லப்பா ஒருவர் தான் என்பது குறிப்பிடத் தகுந்தது. "ஸ்கிட்’களில் அவர் எத்தகைய எளிய தமிழ் தடையை கையாண்டுள்ளார் என்பதற்கு ஒரு சிறு உதாரணம் தருகிறேன்