பக்கம்:பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை.pdf/172

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ižū இவ்வாறு வளரும் கட்டுரையின் முடிவுப் பகுதி சித்தனேக்கு உணவாக அமைந்துள்ளது. "மனிதனுக்கு மனிதன் வாய்கொடுத்துப் பேசுவதில் தான் உலகம் புரண்டு கொடுக்கிறது. கலைஞனுக்கு இது தான் அவசியம். அவன் மனமும் கண்ணும் வாயும் உலகத்தை வம்புக்கு இழுத்து ஆராய வேண்டும். கருத்திலே அதைப் பதியச் செய்ய வேண்டும். வாழ்க்கையின் ஜீவன் வம்பு. இந்த வம்பை சித்திரிப்பவன் கலைஞன். இவ்வளவு பெருமைக்கு இடமாக இருக்கும் வம்பைப் பற்றி எளிதாகப் பேசுபவன் வாழத் தெரியாது வாழ்க்கையை வாழ்ந்தவன் ஆவான். ஆளுல் வம்பு பேசுவதிலே ஒரு எச்சரிக்கை அதிலே காரியார்த்தம் இருக்க வேண்டும். அவ்வளவு தான், ரொம்ப பெரிய காரியம் அது."