பக்கம்:பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை.pdf/178

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#76 பாரதிக்குப் பின் என்று கூறத் தகுந்த சில அருமையான சொற்சிதைவுகளும் சேர்ந்து தமிழ் பாஷையை உரிமையுடன் அவரிடம் வளர வைத்திருக்கின்றன" என்று கி. சந்திரசேகரன், தி. ஜானகிராமனின் எழுத்து பற்றிக் குறிப்பிட்டிருக்கிரு.ர். பேச்சு நடையை நன்கு எடுத்தாள்வதற்கு ஏற்ற ஒரு உத்தியை ஜானகிராமன் தனது கதைகளில் பயன்படுத்தி யிருக்கிருர், சம்பாஷணையிலேயே கதையை வளர்த்துச் செல்வது. இந்த உத்தியை இங்கிலீஷில் எர்னஸ்ட் ஹெமிங்லே திறமையாகப் பயன்படுத்தியிருக்கிரு.ர். தமிழில், கு. ப; ராஜகோபாலன் வெற்றிகரமாகக் கையாண்டிருக்கிரும். அவருக்குப் பிறகு தி. ஜானகிராமன் அதை உபயோகித்து அருமையான சாதனைகள் புரிந்திருக்கிரு.ர். அவருடைய கலை உள்ளமும், ரசனை நோக்கும், விலகி நின்று பரிகாசமாய் விளக்குகிற போக்கும் இந்த உத்திக்கும் ஜானகிராமனின் நடைக்கும் விசேஷ நயங்கள் சேர்த்துள்ளன. 'ரசிகரும் ரசிகையும்’ என்ற கதையிலிருந்து ஒரு உதாரணம்: 'பிள்ளைவாள், இப்படி வாருமே, கீழ நின்னுண்டிருப் Gt sfrt*.* : "இருக்கட்டுங்க காத்து, சில்லாப்பா அடிக்குது. வண்டி கிளம்ப எத்தனை நிமிஷம் இருக்கு? 'அது இருக்கு. பத்து நிமிஷம்." 'குளுரு தாங்கவீங்களே, கீழ நிக்கிறீங்களே.' "என்னையாது! மிருதங்கத்தைத் தட்டப் போறவர் இப்படிப் பயந்து செத்தீர்ளு எனக்கு என்னமாய்யா இருக்கும் வாடறவனுக்கு?