பக்கம்:பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை.pdf/18

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

jà டயரிக் குறிப்புகள் போன்றவற்றிலிருந்து மாதிரிக்குக் கொஞ்சம் எடுத்துத் தந்து, வளரும் வசன நடைக்குச் ફિજી உதாரணங்கள் என்று கூறின. . அப்புறம் 1959ல் ரா. பூரி, தேசிகன்:தமிழில் உரைநடை பற்றி ஒரு கட்டுரை அளவுக்குச் சிந்தித்திருந்தார். உரைநடை வளர்ச்சி பெற்று வந்திருக்கும் ஒரு மொழியில் இவை எல்லாக் மிகவும் குறைவான முயற்சிகளே ஆகும். - தமிழ் உரைநடை பற்றிய விரிவான ஆராய்ச்சி, அல்லது தமிழ் உரைநடையின் வரலாறு எதையும் எழுதுவது என் நோக்கம் அல்ல. அப்படி ஒரு ஆராய்ச்சியும், ஒரு வரலாறும் அவசியம் தயாரிக்கப்பட வேண்டியவைதான். பல்கலைக் கழகம், தமிழ் வளர்ச்சிக் கழகம் போன்ற, போதுமான வசதிகளும் வாய்ப்புக்களும் கொண்டுள்ள, திறுவனங்கள் மேற்கொள்ள வேண்டிய வேலைகள் அவை. சகலவிதமான உற்ருக்குறைகளையும் கொண்டிருக்கிற என்னைப் போன்ற தனிநபர் இத்தகையபெரிய சாதனைகளைசெய்து முடிப்பது கிடக்கட்டும்!-அரைகுறையாகக்கூ. ச் செய்ய இயலாது. நான் எழுதப் போவது தமிழ் உரைநடை பற்றிய ஆராய்ச்சியும் அல்ல, வரலாறும் இல்லை என்ருல், பின்னே அது என்ன என். சந்தேகம் இயல்பாக எழும். பாரதிக்கு முன்னும் பின்னும் உள்ள உரைநடைப் போக்கை கவனிப்பது ஒரு சுவாரஸ்யமான விஷயம் ஆகும். ஒவ்வொருவரும் அவரவர் அனுபவம் ஆற்றல் உணர்ச்சி கற்பனை, சிந்தனை இவற்றுக்குத் தகுந்தபடி, அவரவர் தனது காலத்தில் தான் தான் எடுத்துக் கொண்ட விஷயத்துக்கு ஏற்ப, எப்படி எல்லாமோ மாற்றி மாற்றி உரைநடைப் போக்கில் பல சாயல்களை ஏற்றி இருக்கிருர்கள். அப்படிப் பலரது புதுச் சாயல் கொண்ட உரைநடைகளைப் பற்றிய சிந்தன (Reflections) தான் இது.