பக்கம்:பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை.pdf/182

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

21, ஜெயகாந்தன் 1960களிலிருந்து தமிழ் எழுத்துலகத்தில் ஜெயகாந்தன் ஒரு வவிய சக்தியாக விளங்குகிரு.ர். இளம் எழுத்தாளர் களிடையே அவருடைய பாதிப்பு அதிகம் காணப்படுகிறது. அவரைப் பின்பற்றி--ஜெயகாந்தன் மாதிரியே-எழுத வேண்டும் என்று ஆசைப்பட்டு முயன்றவர்கள் அநேகர் ஆளுல் வெற்றிபெற்றவர் எவரும் இலர். ஜெயகாந்தன் பிறரால் பின்பற்ற முடியாத தனி சக்தி ஆவார். அவருக்குக் கிட்டிய அனுபவங்களும், வாழ்க்கையை அவர் தரிசித்த நோக்கும், அவற்றை அடிப்படையாக்கி ;வர் வளர்த்த-வளர்க்கிற-சிந்தனைகளும், இவற்றை எடுத்துச் சொல்கிற தெளிவும் துணிச்சலும் விசேஷ L£ffళ శi), தான் கண்டதை, கேட்டதை, உணர்ந்ததை, சிந்தித் ததை அழுத்தமாக எடுத்துச் சொல்கிருர் ஜெயகாந்தன். 'உள்ளத்தில் உண்மை ஒளி உண்டாயின் வாக்கினிலே ஒளி உண்டாம் என்ற உண்மைக்கு அவருடைய எழுத்துக்கள் நல்ல சான்றுகன் ஆகின்றன. எண்ணங்களை எடுத்துச் சொல்கிற சாதனமாகவே ஜெயகாந்தனின் உரைநடை அமைகிறது. முதலில் அவர் எளிமையாக, சிறு சிறு வாக்கியங்களாகத்தான் ஆரம்பிக் கிரும்.