பக்கம்:பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை.pdf/19

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2. பாரதிக்கு முன் புலமைக்கு அழகு பிறருக்குப் புரியாமல் எழுதுவது என்பது முன்காலத்து வழக்கமாக இருந்தது. சிறு விஷயத் தைத் தெளிவாக விளக்க வேண்டும் என் முல் கூட, கடின நடையைக் கையாள்வதே ஒரு மரபு ஆக இருந்தது! உதாரணத்துக்கு ஒன்றைக் குறிப்பிடலாம். நூல்' என்பதை விளக்க முன்வந்த இறையனரகப் பொருளுரை, ஆசிரியர் எழுதியுள்ளது. இது: 'நூல் போறலின் நூலென்ப. பாவை போல் வாளைப் பாவை என்ருற்போல. நூல் போறல் என்பது, நுண்ணிய பலவாய பஞ்சு நுனிகளாற் கைவன் மகடூஉத் தனது செய்கை மாண்பிளுல் ஒரிழைப்படுத்தலாம்-உலகத்து நூல் நூற்றலென்பது அவ்வாறே சுரந்து பரந்து சொற்பரவை களாற் பெரும்புலவன் தனது உணர்வு மாட்சியிற் பிண்டம் படலம் ஒத்தச் சூத்திரம் என்னும் யாப்பு நடைபடக் கோத்தலாம். உலகத்து நூல் செய்தலாவது. அவ்வகை நூற்கப்படுதலின் நூலெனப்பட்டது. இனி ஒரு சாரார் நூல் போலச் செப்பஞ் செய்தலின் நூலென்ப." இந்த வழியிலேயே பழகிவிட்டகளுல் சமீப காலம் வரையில்கூட பெரும் புலவர்களும் வித்துவான்களு கடினம் மான நடையில் எழுதவே ஆசைப்பட்டார்கள். அப்படி எழுதுவதே தங்கள் பாண்டித்தியத்தைப் புலப்படுத்தும் என்று அவர்கள் கருதினர்கள்,