பக்கம்:பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை.pdf/190

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#38 பாரதிக்குப் பின் தமிழ் உரைநடையின் வளத்துக்கும் வளர்ச்சிக்கும் ஆக்கபூர்வமாகச் செய்யப் பெற்றுள்ள முதல் முயற்சியே அவருடையது தான் என்று அசோகமித்திரன் கூறுகிரு.ர். வசனநடைச் சிறப்புக்கு உதாரணங்களாகப் பேசப் படுகிற புதுமைப்பித்தன். லா. ச. ராமாமிர்தம் போன்ற வர்கள் கூட மரபு ரீதியான, முறையான தமிழ் உரை நடையைத் தான் வளர்த்திருக்கிருக்கள். மாறுபட்ட, புது முயற்சியாக அவர்கள் உரைநடையை ஆண்டு சோதனைகள் பண்ணவில்லை. ஆனல், நீல. பத்மநாபன் ஏழுச் செட்டி மார்கள் என்ற ஒரு தனிப்பட்ட சமூகத்தில் வழங்கப்படுகிற பேச்சு வழக்குகள், பழமொழிகள் முதலியவற்றை, அவர்கள் வசிக்கிற வட்டாரத்தில் இயல்பாகப் பேச்சில் கலந்துவிட்ட மலேயாளச் சொற்களோடும் சேர்த்து தனித்த நடை ஒன்றை வெற்றிகரமாக வளர்த்திருக்கிருர் என்பதே அசோகமித்திரனின் கூற்றுக்கு ஆதாரம் ஆகும். & நீல. பத்மநாபனின் விசேஷமான உரைநடைக்கு "தலைமுறைகள்’ தாவவிலிருந்து சில உதாரணங்கள் “ராத்திரி சமயத்தில், சக்கடா வண்டியில் போவதும் ஒரு சுகம்தான். ரண்டு வண்டி நிறைய ஆளுகள், லொட லொடண்ணு போய்க் கொண்டிருக்கையில் அங்கடி இங்கடி வண்டி ஆட உள்ளே இருக்கப்பட்டவங்களின் தலைகள் :டார் மடார் என்று மோதிக் கொள்ளும், அதனல் திரவி கோச்சுப் பெட்டியில் எப்பவும் இடம் பிடிச்சுக் கொள்வான். உட்கார்ந்திருந்து கால் மரத்துப் போய் விட்டதால் திரவியும் கீழே இறங்கி வண்டிங்க பின்ஞலேயே அப்பாவின் கூட கொஞ்சதாரம் நடந்தான். நிலா வெளிச்சத்தில் வெள்ளி வாளாக பளிச்சிட்ட பனையோலைகளில் காற்று விறுவிறு என்று சுழன்று சலசலக்க வைத்தது. பாதை