பக்கம்:பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை.pdf/196

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

శ్రీ இவர் பல இடங்களில் உரிய பொருளை அடைப்புக்குறி களினுள் தந்திருப்பதையும் குறிப்பிட வேண்டும். எடுத்துக் காட்டாக 'குற்றித் தொறப்பையால் (சின்னத் துடைப்பத்தால்) சுத்தமாய் பெருக்குவாள்." “ஊசி அடிக்கவும் (கேலி பண்ணவும்) துணிந்தான்.” சாலம் அதன் கூட்டுக்காரிகளையும் (தோழிகளையும்) கூட்டிகிட்டு பள்ளிக்கூடத்துக்குப் போளுள்." - "கிட்டே யிருத்த பச்சக்காரன்கள் (கூட்டாளிகள்) யாருகிட்டையும் பேசவே தோணல்லை.” மொத்தத்தில் பார்க்கிற போது, ஒரு கதம்பத்தின் வசீகரத்தைப் பெற்றுள்ள தனி ரகமான நடையை நீல. பத்மநாபன் கையாள்கிருர் என்று கூறத் தோன்றுகிறது.