பக்கம்:பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை.pdf/197

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

23. ஆ. மாதவன் கேரளத் தமிழ் தனிரகமான வசீகரம் உடையது என்பதை ஆ. மாதவன் எழுத்துக்களின் வாயிலாக நன்கு உணரமூடியும். நீல.பத்மநாபன் ஏழுர் செட்டிமார் சமூகத்தில் வழங்கி வரும் பேச்சுவழக்குகள், பழமொழிகள், மலையாளச் சொற்கள் எல்லாம் கலந்த ஒரு உரைநடையை உருவாக்கி யிருக்கிரு.ர். ஆ. மாதவன் திருவனந்தபுரம் சாலைக் கடைத் தெருவில் பல தரப்பட்ட மக்களிடையே ஜீவனோடு இயங்கும் மலையாளத் தமிழைக் கொண்டு ஒரு உரைநடையை ஆக்கி பிருக்கிரு.ர். சிறிது கொச்சைத் தன்மை வாய்ந்த எளிய, தெளிவான தடையில் அவர் கடைத் தெருவில் காணப்படுகிற குணச் சித்திரங்காேக் கொண்டு இனிமையான கதைகளைப் படைத் திருக்கிரு.ர். திருவனந்தபுரம் சாலைக் கம்போளம்’ வட்டாரமும், அங்குள்ள வேடிக்கை மனிதர்களும் மாதவன் எழுத்தில் உயிர்த் துடிப்புடன் இயங்குகிருர்கள். அதற்கு அவர் கையாள்கிற உரைநடை தான் காரணம். “எட்டாவது நாள் கதையில் ஓடைக்காரன்-கட்டை கோவிந்தன்” என்ற பாத்திரம் பற்றியவர்ணனை இது: "என்ன உறச்ச தேகம். கறுகறு வென்று குண்டலப் புழு போல இருக்கான், செவத்த கண்ணும், உருண்டை முகமும்