பக்கம்:பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை.pdf/20

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

§§ பாரதிக்குப் பின் நான் ஏறிய ரயில் வண்டி நடுராத்திரி மதுரை சேர்ந் தது' என்ற சாதாரண விஷயத்தைச் சொல்லவந்த ஒரு மகா வித்துவான், நான் போந்த நீராவித் தொடர் வண்டி தள் ளிரவில் நான்மாடக்கூடலினை நண்ணிற்று' என்று எழுதி வைத்தார். இந்த நூற்ருண்டின் முப்பதுகளிலும் நாற்பதுகளிலும், எஸ். எஸ். எல். ஸி. தமிழ்ப் பாடப் புத்தகத்தில் எனது இலங்கைச் செலவு என்ற பாடம் அடிக்கடி இடம் பெற்று வந்தது. யாம் இலங்கை சென்று வருவதற்கு ஏற்பட்ட பொருட்செலவை இங்கு கூறப் புகுந்தோமில்லை. யாம் இலங்கைச் சென்றதைக் குறிக்கவே இச்சொல்லை ஈண்டுப் பெய்தனம் என்று அக்கட்டுரையை ஆரம்பித்திருந்தார் அதை எழுதிய தமிழ் அறிஞர். (இது வார்த்தைக்கு வார்த்தை சரியான மேற்கோள் அல்ல. நினைவிலிருந்து எழு தப்பட்டுள்ளது.) முதலிலேயே எனது இலங்கைப் பயணம் என்று தலைப்பட்டிருக்கலாம். அப்படிச் செய்திருந்தால், தனது புல மையைக் காட்டுவதற்காக வீண் அளப்பு பண்ணியிருக்க முடியாதே! இதுபோல் எழுதப்பெற்ற பாடங்களையும் நூல்களையும் படித்தவர்களில் அநேகர் நாமும் இப்படித்தான் எழுத வேண்டும் என்று ஆசைப்பட்டு எழுதத் துணிவது இயல்பாக இருந்தது. இந்த மனே பாவம் குறித்து டி. கே. சிதம்பர நாத முதலியார் அழகாக எழுதியிருக்கிருர் "ஆங்கில பாஷையைக் கற்கும்போது, வார்த்தை எங்கே? வார்த்தை எங்கே?' என்று ஒரேயடியாய் வார்த்தை மோகத்தில் முழுகிப் போனவர்கள், தமிழ்ப் பாடங்களில்மூலத்திலும் , உரையிலுமே-தங்களுக்கு முன் தெரிந்திராத